மெல்பேர்ன் சர்வதேச கல்லூரியின் முன்னாள் பணிப்பாளர் துளசிதரன் சந்திரராஜா நான்கு ஆண்டுகள் தடுப்பு காவலில் இருந்ததுடன் புலிகளுடன் தொடர்புகளை பேணியதற்காக அமெரிக்காவின் கைது உத்தரவிற்கு ஆதரவான கூட்டாட்சி அரசாங்கத்தின் தீர்ப்பிற்காகவும் பல காலம் காத்திருந்தார்.
இதற்கு முன்னர் அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பில் மிகவும் இறுக்கமான சட்ட திட்டங்களை பின்பற்றவில்லை.
ஆனால் தற்போது, மிகவும் இறுக்கமான சட்டதிட்டங்களைப் பின்பற்றவதற்கான காரணம் அகதி அந்தஸ்து கோருவோர் அவர்களுடைய சட்டத்தை மீறுவதனாலே நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கோலா ரொக்சோன் தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படையிலேயே இலங்கையரான துளசிதரன் சந்திரராஜா (38 வயது), விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளார்.
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான இவர், ஜுலை 2008 இல் புலிகளுக்காக உதவி செய்தமைக்காக போன்ற ஆறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக அமெரிக்காவினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார். அமெரிக்க அரசாங்கமும் இவரைக் கைது செய்யுமாறு கோரியிருந்தது.
இந்நிலையில் இவரை நாடு கடத்துவதற்கான கோரிக்யைினை அவுஸ்திரேலிய அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இவரது குடும்பத்திலிருந்து இவரைப் பிரித்து தனியாக வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், துளசிதரன் சந்திரராஜாவின் குடும்பத்தினர், இவரை நாடு கடத்தினால் உயிருடன் மீண்டும் பார்க்க முடியாது என அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten