தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juli 2012

சுவிஸிலிருந்து மூன்று தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்! அதிர்ச்சியில் சுவிஸ் தமிழர்கள் [ வெள்ளிக்கிழமை, 27 யூலை 2012, 11:58.54 AM GMT ]



சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத் தமிழர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ள விடயம் சுவிஸ் தமிழர்களை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.
இன்று இலங்கையின் கட்டுநாயக்கா விமானநிலையத்தினை, நாடு கடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் தமிழர்களை திருப்பி அனுப்ப தொடங்கியுள்ளது.
சுவிஸ் நாட்டில் நிலையான அகதி அந்தஸ்து அற்ற நிலையில், 2,000 தமிழர்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், மூவர் நாடுகடத்தப்பட்ட விடயம், சமீபத்திய காலங்களில் அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களை அச்சங்கொள்ள வைத்துள்ளது.
திருப்பி அனுப்பட்டவர்கள் மூவரும் யாழ்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.
கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில், சுவிஸ் தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் பங்கெடுத்திருந்த சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான திணைக்கள அதிகாரியொருவர், இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கைகளை சாதகமாக நோக்கப்படும் நிலை குறைவெனத் தெரிவித்திருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் இலங்கையர்கள், சித்திரவதைகளையும் அச்சுறுத்தல்களையும் இலங்கையில் எதிர்கொள்கின்றனர் என பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
உறுதிப்படுத்தப்படதாக பிந்திய தகவலொன்றின்படி, 13 தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, நாடு திரும்பும் அகதிகளுக்கு செங்கம்பளம் விரிக்க முடியாது எனவும், இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten