தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juli 2012

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர், புலனாய்வுப் பிரிவினரால் கைது !!



அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த தமிழரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளுடன் குறித்த நபர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் குறித்த நபரை இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபரை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட குறி;த்த நபர், போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமக்கு எதிராக சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளித்த குற்றத்திற்காக நீர்கொழும்பு நீதிமன்றம் குறித்த நபருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தயான் அன்தனி என்னும் 48 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten