மட்டக்களப்பு பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ரமணனுடன் இணைந்து இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது பத்மநாதன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்த பத்மநாதன் அண்மையில் நாடு திரும்பியதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரகசியமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பத்மநாதனை கைது செய்துள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகளில் குண்டுத் தாக்குதல் சம்வங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பத்தமநாதன் 1999ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2002ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பத்மநாதனை கைது செய்யுமாறு நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வைத்து வெள்ளைவானில் இனந்தெரியாத நபர்கள் தமது மகனை கடத்திச் சென்றதாக பத்மநாதனின் தயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் மற்றும் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten