இந்தநிலைமை அவ்வாறிருக்கையில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 150 பேர் வரை எதிர்வரும் நாட்களில் நாடுகடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இலங்கையிலும் பல அரசியல் அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வொன்றை நடத்திய த ஏஜ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் இலங்கையிலும் பல அரசியல் அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வொன்றை நடத்திய த ஏஜ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு மீள அனுப்பப்பட்ட சரத் என்பவர் கருத்து வெளியிடுகையில்,
இலங்கை இராணுவத்தினரால் தாம் சுமார் 45 நாட்கள் சட்ட முன்னெடுப்புகள் எவையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
அதேவேளை பலதரப்பட்ட துன்புறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் அங்கலாய்த்துள்ளார்.
இதுதவிர, சுமித் என்பவர் தமது 4 வயது பிள்ளைக்கு முன்பாகவே கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, 23 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சுமித்தின் மனைவி கூறுகிறார்.
எனினும் அவர் மீது சட்ட நடவடிக்கைக்கான பதிவுகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten