தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரனை,இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது
போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் அறிவித்த மே 19ம் திகதி அதிகாலை7.30 மணிக்கு நந்திக்கடல் களப்பின் மேற்குப் புறமாக பாலச்சந்திரன்இராணுவத்திடம் சென்று சரணடைந்துள்ளார். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகுபடைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்டஇராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள்தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்புஉறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்.இவரோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக பாலச்சந்திரனோடுஅனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின்கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல்குணரத்னவிற்கு இவ்விடையத்தை அறிவித்துள்ளார். சிறிது தூரத்தில் இருந்தகமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய, பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரைநந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்ன இருக்கும் இடத்துக்குஅழைத்துச் சென்றுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்டகுழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போதுதனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்துஇராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாகபாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத்தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்குஅறிவித்துள்ளார். இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாகவரக்கூடும் என்பதுடன், சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும்தப்பிவிடுவதற்க சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதேசரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார் எனமேலும் அறியப்படுகிறது. இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவைதொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ,மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று,தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4''தொலைக்காட்சியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்தப்படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களைகசியவிட்டுள்ளார். குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில்தீராத நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தான் முன் நிலையில்பாலச்சந்திரணுக்கு நடந்த கொடுமைகளை, தான் வெளியே சொன்னால் தான் தன்பழி தீரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 14 வயதுபச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல், அவனை கொலைசெய்தது பிரிகேடியர்கமல் குணரத்னவே என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நன்றி :-அதிர்வு
Geen opmerkingen:
Een reactie posten