கனடாவின் “நஷனல்போஸ்ட்” (nationalpost) என்ற ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்ட போராளிகள் தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை “நஷனல்போஸ்ட்” (nationalpost) ஊடகம் வெளியிட்டு வைத்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகத்திடம், கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், கனேடிய ஊடகத்தில் அம்பலமாகியுள்ளன.
தமிழ் ஊடகப் பரப்பில் குறித்த ஆதாரங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும், இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவருவதன் ஊடாகவே, சிறிலங்காவின் தமிழின அழிப்பினை, சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்க முடியுமென என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதே செய்தி கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையிலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten