தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 juni 2012

அரசாங்கப் படையினருக்கு சேறு பூசும் வகையில் 32 காணொளிகள் !


இலங்கை அரசாங்கப் படையினருக்கு சேறு பூசும் நோக்கில் சுமார் 32 காணொளிகள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் வாழும் புலி ஆதரவு சட்டத்தரணியான வாசுகீ மருகனாஸ் என்பவர் இந்த காணொளிகள் விநியோகம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, லண்டனில் இருந்த காலப்பகுதியில் இந்த புதிய காணொளிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் செல்லிடப் பேசிகளின் மூலம் பதிவு செய்யப்பட்டவை என வாசுகீ தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சித்தரிக்கும் வகையில் இந்த காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






http://news.lankasri.com/show-RUmqyGTdOWgq0.html


Geen opmerkingen:

Een reactie posten