2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளின் அரசுகளையே நம்பியிருக்கும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏனைய ஜனநாயக அமைப்புக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten