பொஸ்பரஸ் குண்டுகளை இலங்கை இராணுவம் பாவித்தது: ஆதாரப் புகைப்படங்கள் !
01 August, 2011இறுதி யுத்தம் ஒரு மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்றும், விடுதலைப் புலிகள் பிடித்துவைத்திருக்கும் பொதுமக்களை இலங்கை இரணுவம் மீட்கவே இப்போரை இராணுவம் மேற்கொள்வதாக இலங்கை கூறிவந்தது. பொதுமக்களை கொண்று குவித்த இராணுவம் மக்கள் குடியிருப்பு மீதும் பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டுத் தாக்கியதற்கான ஆதாரப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பெண்களை மானபங்கப்படுத்தியும் இளைஞர்களின் கைகளைக் கட்டி அவர்களின் தலையில் சுட்டுக்கொலைசெய்தது போதாது என்று மக்கள் வீடுகள் மீதும் இலங்கை விமானப்படை பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
கீளே காணப்படும் புகைப்படங்கள் புதுமாத்தளான் பகுதியில் கடற்கரையை அண்டிய சிறிய குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இத் தாக்குதலில் பலர் சம்பவ இடத்திலேயே கருகிக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இலங்கை விமானப்படை பாவித்த சில குண்டுகள் முதலில் வெடிக்கும்போது காற்றில் உள்ள பிராணாவாயு (ஆக்சிஜனை) உரிஞ்சிப் பின்னர் வெடித்து எரிகிறது. இதன் காரணமாக இக் குண்டு வெடிக்கும் இடத்தில் உள்ள அயலவர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி மயங்கிவிழுவதும் உண்டு. இல்லையேல் ஓட முடியாத நிலை தோன்றுவதும் உண்டு. இதனாலேயே பலர் பொஸ்பரஸ் குண்டுத் தாக்கத்தால் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட இக் குண்டுகளை எதிரிப் படைகள் மீது கூடப் போடக்கூடாது என்று சர்வதேச நாடுகள் பல சேர்ந்து ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. ஆனால் இக் குண்டுகளை இலங்கை பொதுமக்கள் மீது போட்டு பலரைக் கொத்துக் கொத்தாகக் கொலைசெய்துள்ளது இதுவரை உலகின் கண்களுக்கு கொண்டுசெல்லப்படவில்லை. போர்குற்றங்கள், கற்பழிப்புகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து சர்வதேசம் கவனம்செலுத்தும் அதேவேளை, தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவிக்கப்பட்டது தொடர்பாகவும் சர்வதேசம் கவணத்தில் எடுக்கவேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten