கிறீஸ்பேய்களின் பின்னணியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருப்பதாகவும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமையவே இந்தப் பீதியை அவர்கள் கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.
முன்னதாக ‘வெள்ளை வான்‘ களை கொண்டு பீதியூட்டி வந்த சிறிலங்கா படைப் புலனாய்வாளர்கள் இப்போது கிறீஸ்பேய்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் கிறீஸ் பேய்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் அனைவருமே இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களால் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களில் பலரும் தம்மை சிறிலங்கா படையினர் என்று அடையாளம் காட்டியதும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்கள் தோறும் படைமுகாம்களை நிறுவுவதற்காகவே கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு செயற்படுவதாகவும் கூறியுள்ள மங்கள சமரவீர, ஏற்கனவே, இந்தப் பிரச்சினை காரணம் காட்டி கிழக்குப் பகுதிக்கு 5000 சிறிலங்கா படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பெண்களின் உள்ளாடைகளுடன் கைதான மர்மமனிதன்!
|
Geen opmerkingen:
Een reactie posten