தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 augustus 2011

மட். மர்ம மனிதர்களை துரத்திச்சென்ற இளைஞர்கள் மீது இராணுவம் தாக்குதல்! மூவர் மருத்துவமனையில்!

PhotoVideo
 
[ திங்கட்கிழமை, 15 ஓகஸ்ட் 2011, 10:41.21 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டம், துறைநீலாவணையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்ற போது அவர்கள் பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஓடியதாக கூறி பொதுமக்கள் பொலிஸ் சாவடி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அவ்விடத்துக்கு படையினர் வரவே பொதுமக்கள் கலைந்துசென்றுள்ளனர்.
அதன் பின்னர் வயல்வேலை செய்துவிட்டு வந்தவர்கள், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் வேறு வீடுகளில் படித்துவிட்டு வீதியால் வந்தவேளையில் இரவு 10.30மணியளவில் சீருடையில் வந்த படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் உள்ளன.
மோட்டார் சைக்கிள் செயின்களாலும், பொல்லுத்தடிகளாலும் தாக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த இளைஞர்கள் மூவரையும் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாவும், பா.அரியநேத்திரன் அவர்களும் இன்று காலை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதேவேளை கல்முனை அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கல்முனை பொலிஸ் நிலையத்தின் சோதனைச் சாவடி மீது கல்வீச்சில் ஈடுபட்டதாகக் கூறி இன்று காலை 4 இளைஞர்களை கல்முனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களின் கைது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்து பேசியபோது, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதன் பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் எனவும் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மற்றுமொரு சம்பவத்தில் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் பெரிய போரதீவுப் பகுதியில் வைத்து 19 வயதுடைய இளம் யுவதியொருவர் மர்ம மனிதரால் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten