தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 augustus 2011

இலங்கையின் போர்க்குற்ற உண்மையான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன!- ஹெட்லைன்ஸ் ருடே

[ திங்கட்கிழமை, 15 ஓகஸ்ட் 2011, 10:29.10 AM GMT ]

அண்மையில் ஹெட்லைன்ஸ் ருடே இலங்கையில் இனப்படுகொலை, எனது சாட்சியம் என்ற தலைப்பில் காணொளி ஒன்றினை ஒளிபரப்பியது. இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று, ஹெட்லைன்ஸ் ருடே பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் அவர்களை செவ்வி கண்டபோது தொடுத்த கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு:
கேள்வி: உங்களால் பெறப்பட்ட தகவல்கள் போர்க்குற்ற சாட்டுக்களுக்கான நம்பிக்கையான உண்மையான ஆதாரங்களாக இருக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில்: ஆம்! ஒரு சொல்லில் சொல்வதானால் ஆம் என்றே கூறுவோம். ஏனென்றால் எமது ஊடகவியலாளர் நேரடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் விபரங்களைச் சேகரித்துள்ளார். அவர்களிடம் தேவையான புகைப்படங்கள், பெயர் முகவரி எல்லாவற்றையும் அவர் சேகரித்து வந்துள்ளார்.
கேள்வி: அது சரி! இது எல்லாம் எப்படி நம்பிக்கையானவை எனக் கூற முடியும்?
பதில்: எமது ஊடகவியலாளர் நேரடியாகவே பலரிடம் ஒரே விடயங்களை கேட்டும், விசாரித்தும் தகவல்களை உண்மையென உறுதிப்படுத்தியுள்ளார்.
கேள்வி: இந்தியா மற்றும் அனைத்துலக சமூகம் உங்கள் காணொளி தொடர்பில் ( போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பில்) பதிலளிக்குமா?
பதில்: எங்கள் பணி வெளிக்கொண்டு வருவதே, அதனை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம். அதேவேளை அரசாங்கங்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதனையும் வெளிப்படுத்துவோம்.
கேள்வி: அனைத்துலக மனித அமைப்புக்களிற்கு உங்கள் காணொளியை காண்பித்தீர்களா?
பதில்: இல்லை அவர்களிடமிருந்து அவ்வாறான அழைப்புக்கள் எதுவும் இன்னமும் வரவில்லை.
கேள்வி: சிறிலங்கா அரசிடம் இருந்து என்ன பதில் கிடைத்தது?
பதில்: சிறிலங்கா சார்பாக காணொளி ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதன் தூதரை அழைத்துப் பேச சந்தர்ப்பம் கொடுத்தோம். அவர் சிறிலங்காவின் பிரதிபலிப்பையே வெளிப்படுத்தினார்.

Geen opmerkingen:

Een reactie posten