தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 augustus 2011

டில்லி கருத்தரங்கில் தமிழ்கட்சிகள் உலகத் தமிழரின் விடுதலை வேணவாவை ஓங்கியொலிக்க செய்வார்களா!

[ திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2011, 09:48.59 AM GMT ]
எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்களிலும் புதுடில்லியில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் தமிழ்கட்சிகள் உலகத் தமிழரின் விடுதலை வேணவாவை ஓங்கி ஒலிக்க செய்வார்களா?
தமிழீழம் என்பது உலகத் தமிழினத்தின் உயிர் நாடியும், இறுதியானதும் உறுதியான முடிவும். அதை அவர்களால் தவிர வேறு யாராலும் எவராலும் மறக்கவோ, மறுக்கவோ அல்ல மாற்றவோ முடியாது.  அதற்கு சிறந்த உதாரணம் முள்ளிவாய்க்கால்.
குருதி தோய்ந்த முள்ளிவாய்க்கால் தினங்களை ஏன் நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டும்?
பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட இடம் என்பதால் மட்டும் அல்ல.
எந்த ஒரு ஈழத் தமிழன் தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழ நினைத்தானோ அவன் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டான் என்பதுக்காக மட்டும் அல்ல.
உண்மையிலே ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்துக்கான பயணத்தில் எந்த ஒரு பாரிய அழிவு ஏற்பட்டாலும் அவர்கள் தமது கொள்கையை சாக விட மாட்டார்கள் என்பதுக்கான சாட்சியே "முள்ளிவாய்க்கால்". அந்த மக்களின் உறுதி தளராத அர்ப்பணிப்பையே முள்ளிவைக்கால் தினங்கள் சுமந்து நிற்கின்றது .
முள்ளிவாய்க்கால் எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியை அடையாளப்படுத்துகின்றது. முள்ளிவாய்க்கால் எமக்கு சிங்கள இனவெறி அரசின் இராணுவ பலத்தை காட்டவில்லை. மாறாக எமது மக்களின் அசைக்கமுடியாத தார்மீக நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது.
ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்கான கொள்கையை அங்கு தங்கள் உயிர்களை அதற்காக அர்ப்பணித்தவர்கள் வகுத்தார்கள். உயிரோடு வாழும் நாம் அல்ல.
உயிரோடு வாழும் எமக்கு அந்த கொள்கையை மாற்றவோ அல்லது புதிதாக வகுக்கவோ அதிகாரம் அல்ல. முள்ளிவாய்க்காலில் அவர்கள் நினைத்திருந்தால் அனைவரும் உயிர் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் கொள்கை இறந்திருக்கும் அத்தோடு தமிழினம் அடியோடு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் மாறாக தமது உயிர்களை கொடுத்து தமிழினத்தின் கொள்கையை வாழ வைத்தார்கள்.
எமது மக்கள் இன்று மட்டும் இல்லை என்றும் விழிப்போடு தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம் தான் அவர்கள் தேர்தல் மூலம் கொடுத்த மௌனத்தின் மரண அடி.அவர்கள் போட்ட வாக்குகள் அனைத்தும் தமிழீழம் நோக்கியே.
சிங்கள அரசு தமிழர்களை கற்பனைக்கே எட்டாத வகையில் கொடூரமாக ஆயிரம் பத்தாயிரம் என்று லட்சக் கணக்காக அழித்துள்ளார்கள். மர்மமாக மர்ம மனிதர்களை கொண்டு அழிக்கின்றார்கள். இருந்தும், அவர்கள் தங்களுடைய முடிவில் இன்று வரை மிக உறுதியோடு நிற்கின்றார்கள்.
இது தான் எமக்கான முள்ளிவாய்க்காலின் செய்தி.
அந்த வகையில் நிலத்திலும் புலத்திலும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை தலை மேல் சுமந்து செல்பவர்கள் நிச்சயமாக எங்கள் மண்ணுக்காக மனச்சாவெய்திய அந்த மக்களின் உறுதியான தீர்வையும் அத்துடன் உறவுகளை இழந்து உயிர் தப்பி வாழும் அந்த மக்களின் ஆணையையும் ஏற்று செயற்படுவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.
"விழ்ந்தவர்கள் எல்லாம் விதையாகி போனதால்தான் விடுதலைப் போர் இன்றும் தொடர்கின்றது ".(தலைவரின் சிந்தனையில் இருந்து)
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Geen opmerkingen:

Een reactie posten