சிறிலங்காவின் நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை உத்தேச அரசயலமைப்பின் ஊடாக தொடர்ந்தும் பாதுகாப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
அதேவேளை உத்துச அரசியல் சாசனத்தில் நாட்டின் ஆட்சி முறைமைய ஒற்றையாட்சியை அடையாளப்படுத்தும் “ஏக்கிய ராஜ்ய” என்ற சிங்கள வார்த்தையையே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மூன்று மொழிப் பிரதிகளிலும் குறிப்பிடுவது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த 2019 ஆம் ஆண்டு புதுவருட கொண்டாட்டம் ஜனவரி முதலாம் திகதியான இன்றைய தினம் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்றது.
புதுவருடத்தினை முன்னிட்டு அலரி மாளிகையில் விசேட பௌத்தமத வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
இதன்போது முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சிறிலங்காவின் நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை உத்தேச அரசயல; அமைப்பிலும் அவ்வாறே பேணுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.
அதேவேளை உத்தேச அரசியல் சாசனத்தில் நாட்டின் ஆட்சி முறைமைய ஒற்றையாட்சியை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தும் வார்த்தையான “ஏக்கிய ராஜ்ய” என்ற சிங்கள வார்த்தையையே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மூன்று மொழிகளிலான அரசியல் சாசன பிரதிகளிலும் குறிப்பிடுவது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் தீர்மானித்திருக்கின்றனர்.
இந்தத் தகவலை நேற்று முன்தினம் கண்டி குண்டசாலை பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது கட்சியின் மூத்த தலைவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் பகிரங்கமாக உறுதிப்படுத்தியிருந்தார்.
டிசெம்பர் 28 ஆம் திகதி சிறிலங்கா பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கண்டி அஸ்கரி மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்தித்திருந்தபோதும் இந்த இரண்டு விடையங்களிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மூலம் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து சலுகைகளையும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன வாக்குறுதி அளித்தார்.
ருவான் விஜேவர்தன -(பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்) –“கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக எமக்கு பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும் அந்த சவால்களில் வெற்றிபெற்றுள்ள நாம், ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைத்துள்ளோம். இதற்கமைய பிறந்துள்ள இந்த புத்தாண்டில் நாம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொடுக்க உறுதியான அரசாங்கமாக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அரசியல் குழப்பங்கள் முடிவடைந்துள்ள நிலையில் மக்கள் தமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசாங்கமாக நாம் நடவடிக்கை எடுப்போம். இதற்காக இன்னும் ஓரிரு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ள இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய உச்ச அளவிலான சலுகைகளை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
https://www.ibctamil.com/srilanka/80/111708?ref=recommended1
Geen opmerkingen:
Een reactie posten