தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 december 2018

புதிய ஜேர்மன் புலம்பெயர்தல் சட்டங்கள் எவ்வாறு பிரித்தானிய சட்டங்களிலிருந்து மாறுபடுகின்றன: ஒரு அலசல்!


இரண்டு ஐரோப்பிய நாடுகள் தங்கள் புலம்பெயர்தல் விதிகளில் பெரிய மாற்றங்களை நேற்று முன் தினம் அறிவித்த நிலையில், இரண்டிற்கும் இருந்த ஒற்றுமைகள் முடிவுக்கு வந்துள்ளன.
பிரித்தானியா, பொருளாதாரத்தைவிட அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நேரத்தில், ஜேர்மனியின் புதிய விதிகள் வெளிநாட்டு வேலை தேடுவோரை வரவேற்கின்றன.
புலம்பெயர்தலின் நீண்ட கால தாக்கங்களைக் குறித்து கவலை கொண்டுள்ள பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதோடு, அதன் ஆட்சி, வலிமைப்படுத்தப்பட்ட எல்லை மற்றும் தடையில்லா போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஆனால் ஜேர்மனியோ, பணியாளர்கள் தட்டுப்பாட்டால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, வேலை தேடும் வெளிநாட்டு பணியாளர்கள் அதிகம்பேரை ஈர்க்கும் வகையில், தனது புலம்பெயர்தல் விதிகளை எளிமையாக்கியுள்ளது.



பிரித்தானிய உள்துறைச் செயலரான Sajid Javid, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பதைக் குறித்து தெளிவுபடுத்தியுள்ளதை வலியுறுத்தும் அதே நேரத்தில், பிரித்தானிய உள்துறை அமைச்சரான Horst Seehofer எங்கள் செழிப்பை உறுதி செய்து கொள்வதற்காகவும், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்ககவும் மூன்றாம் நாடுகளிலிருந்து பணியாளர்கள் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் பொருளாதாரத்துறை அமைச்சரான Peter Altmaierம் இந்த புதிய சட்டத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என பாராட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் நோக்கம் சில குறிப்பிட்ட மக்களை நாட்டிற்குள் அனுமதிக்காத வகையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்துவதையே முதன்மைப்படுத்துவதாக உள்ளது, அதற்கு, நாடு பொருளாதாரத்தைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் தருவதாக தொழில்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதற்கு நேர்மாறாக விசா பெறுதலை எளிதாக்கும் ஜேர்மனி, சில குறிப்பிட்ட மக்கள் எளிதாக நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு தங்க வைக்கப்படுவதை முதன்மைப்படுத்துகிறது, அதற்கு ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலாவின் கட்சியினர் உட்பட பல அரசியல்வாதிகள், புலம்பெயர்தல் குறித்த பொதுமக்களின் கருத்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரித்தானிய விதிகள், எவ்வளவு பேர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எண்ணிக்கை நிர்ணயிக்காவிட்டாலும், ஆண்டொன்றிற்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அது மட்டுமின்றி, பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடையாது என்றும் அது அறிவித்துள்ளது.
தொழில்துறை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையில், இந்த திட்டம் பிரித்தானியாவை ஏழை நாடாக்கும் என தொழில்துறையினர் எச்சரிக்கின்றனர்.
புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த ஊதியம் (30,000 பவுண்டுகள்) மருத்துவத்துறை, கட்டுமானத்துறை, ஹோட்டல் துறை, உற்பத்தித்துறை, விவசாயம் முதலான துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் தொழில்துறையினர்.
ஜேர்மனி, தங்கள் தேவைகளை சந்தித்துக் கொள்ளும் திராணியுடைய, சமையல் பணியாளர்கள், உலோகவியல் பணியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் நாட்டுக்குள் வந்து வேலை தேடிக் கொள்வதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவுக்கு நேர்மாறாக, ஒரு தொழில் செய்பவர், நல்ல ஜேர்மன் மொழியும் பேசக்கூடியவராக இருக்கும் பட்சத்தில், தற்போது தங்கள் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையிலிருந்தாலும்கூட, அவர்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்க ஜேர்மனி முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://news.lankasri.com/germany/03/194589?ref=ls_d_germany

Geen opmerkingen:

Een reactie posten