தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 januari 2019

மாதவிடாய்!?


அறிவை விற்றுவிட்ட ஒருவரின் புலம்பல்!
(மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மாதவிடாய்,பேறுகாலம் எல்லாம் உண்டு,அவை பற்றிய அறிவுள்ளவர்கள் நம் பெண்கள் படும் துயரின் காரணம் அறியாரா என்ன!!)

எங்களின் மாதவிடாய் ஒன்றும்
அவ்வளவு எளிதாக கடந்துவிடக்கூடியதல்ல..
பிறப்புறுப்பின் வழியே வழிந்தோடும் 
செங்குருதியின் வலி தெரியுமா
அதற்கு வரி விதித்தவனே உனக்கு!

அந்த 3நாட்களின் எல்லாவற்றிலும்
ஒருவித தயக்கம் இருந்துகொண்டே இருக்கும்..
சராசரியான நடைக் கூட
சற்று தளர்ந்தே இருக்கும்..
நாப்கின்களின் உரசலில் உயிர்போகும்!

அடிவயிற்றை பிடித்துக் கொண்டு
சுருண்டு அழுது படுக்கமுடியாமல்
குடும்பத்தின் வறுமைப் போக்க
வேலைக்கு போகும் பெண்களின்
மனவேதனைக்கு சன்மான வரியென்ன?

கவனிக்க கொஞ்சம் தவறினாலோ
அயர்ந்து உறங்கி விட்டாலோ
ஆடையும் படுக்கையும் அரைகணத்தில்
செந்நிற குருதியில் குளித்திருக்கும்!

ஆணுறைக்கும் அற்ப சாராயத்திற்கும்
விதிக்காத உங்கள் வரியை
எங்கள் உதிரத்திற்கு விதிக்க
எவன் கொடுத்த உரிமையிது?

மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன்
விடுப்பு தரும் நாடுகளிடையே
இலவச நாப்கின் கூட தர
வக்கற்ற நாட்டை ஆள்பவர்களுக்கு
பாரத மாத்தாகி ஜே! ஒரு கேடா!

உன் வரியின் கொடுமையால்
நாப்கின் வாங்க முடியாமல்
முடங்கி கிடக்கும் எங்களுக்கு
அந்த வரியியற்றிய காகிதங்களை
சற்று அனுப்பி வை;
வழிந்தோடும் குருதியில் - அதைக்கொண்டு
கப்பல் விட்டு விளையாட ஆசை!

படித்ததில் பிடித்தது

இந்த படத்தை கூட சில நாய்கள் காமாமாக தான் பாப்பார்கள் அந்த காமவெறி கொண்ட நாய்களுக்கு தெரியாது அவர்களின் தாய்யும் தங்கையும் அக்காவும் படும் வேதனை 


RajKutty Kutty Raj♥️பிரியும் போது புரியும்♥️ 💔✌️💜One Day U Will Miss Me💜✌️💔

Geen opmerkingen:

Een reactie posten