வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரெ லண்டனில் தமிழ் மக்களுடன் நடத்த திட்டமிட்ட சந்திப்புகள் தமிழ்மக்களின் எதிர்ப்பு காரணமாக மீளெடுக்கபட்டன.
எனினும் மீளெடுக்கப்பட்ட சந்திப்புக்களுக்கு பதிலாக வேறு இடங்களில் சந்திப்புக்களை நடத்த ரெஜினோல்ட் குரே தரப்பு தீவிரமாக முயன்றது. இதனால் மேற்கு லண்டனில் ஒரு இடமும் மத்திய லண்டனில் இன்னொரு இடமும் ஒழுங்கு செய்யப்பட்டது
இந்த நிலையில் மத்திய லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்கு எதிராக தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதனால் அந்த சந்திப்பும் பிசுபிசுத்துப்போனது.
இதனையடுத்து பெருமளவிலான காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கட்டுப்படுத்த முனைந்தனர்.
ஆர்பாட்டம் மேற்கொண்ட தமிழ் இளைஞர்கள் மீது பொலிஸ் நாய்களை ஏவுவதற்கு பொலிஸ்சார் முயன்ற காட்சிகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
https://www.ibctamil.com/diaspora/80/107276?ref=imp-news
Geen opmerkingen:
Een reactie posten