தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 september 2018

வெளிநாட்டு புலிகளின் தேசிய தலைவர் ரணிலின் காலடியில்...

புலம்பெயர் நாட்டில் இருந்துகொண்டு இலங்கை அரசை தாறுமாறாக விமர்சித்து வந்த இவர். நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினராக போட்டியிட்டு, ஏகோபித்த தமிழர்களின் ஆதரவில் வென்றவர்.
பின்னர் தானே நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு (ருத்திர குமாரின் இடத்தை கைப்பற்ற) குழுச் சேர்த்து அலைந்தார்.
அடுத்த தலைவராக இவரை வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் பார்த்தார்கள். வெளிநாட்டில் எங்கு சென்றாலும் இவருக்கு தமிழ் கார்ட் கொடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.
இவரை நம்பி ஒரு செயல்பாட்டாளர் கூட்டமே லண்டனில் உள்ளது. இவர்கள் நீண்ட காலமாக தமிழ் தேசிய செயல்பாட்டில் ஈடுபட்டு வந்தவர்கள்.
ஜெயானந்த மூர்த்தி, லண்டனில் தங்கியிருந்த போது எமது போராட்டத்திற்கு இவர் உதவுவார் என்று விடுதலைப்புலிகள் நம்பி விட்டார்கள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளால் பணம் பெற்ற ஒருவர்.
இவரோடு லண்டனில் பழகிய அனைவரும் தற்போது தலையில் முக்காடு போடாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் ஒரு போராட்ட இனத்தை எடுத்துக்கொண்டால். அங்கே காட்டிக்கொடுப்பவர்கள் ஒரு சிலராக இருப்பார்கள். ஆனால் தமிழ் இனத்தை பார்த்தால் தமிழனே துரேகியாக இருப்பான்.
அன்று கருணா பிரிந்து சென்ற போது அவருடன் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தை துாற்றி அதன் பின்னர் வாழைச்சேனை மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புலிகளிற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடாத்தி புலிகளின் தலைவர் படங்களை எல்லாம் எரித்து விட்டு சிவராமின் தயவால் விடுதலைப்புலிகளிடம் சென்று பாவ மன்னிப்பு பெற்றவர்.
அதற்கு கூறிய காரணம் தேர்தலில் வெல்வதற்காக கருணா கூறிய படி விடுதலைப்புலிகள் செய்யச் சொன்னார்கள் அதனையும் முட்டாள் தமிழர்கள் நம்பினார்கள் காரணம் இப்படியான தந்திரம் புலிகளிடம் உள்ளது என கூறி இப்படியாக புலிகள் - தமிழர்கள் என அனைவரையும் முட்டாள்களாக்கிய ஜெயானந்தமூர்த்தி இன்று பிரதமர் ரணில் அருகில் நாக்கை தொங்க விட்டு நிற்கும் பரிதாபம் பாருங்கள் இது தான் அவரின் தேசியம்...
இவருடைய ஏமாற்று வேலையை அன்றே விடுதலைப்புலிகள் உணர்ந்திருக்க வேண்டும் என்பதே இன்று சிலரின் மனக்குமுறலாக உள்ளது.
அது மட்டுமல்லாது கோத்தாபாய பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த போது விடுதலைப்புலிகள் இவர் பெயரில் கொழும்பில் வாங்கிய வீட்டினை மிகவும் லாபகமாக சிவனாதன் கிசோர் மூலம் விற்று பல கோடிகளை சுருட்டிய ஒருவர் அதற்கு என்ன பதில்...
மாமனிதர் சிவராம் அவர்களின் நண்பர் என்பார் அவருடன் கூடவே பயணித்தவர் என்பார் ஆனால் செய்வது துரோம் இன்று சிவராம் வீட்டில் தேனீர் குடித்தவர்கள் எல்லாம் தேசியம் பேசும் துர்ப்பாக்கிய நிலை இது தான் தமிழர்களின் பரிதாப நிலை...
அது மட்டுமா வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபை தேர்தலில் களம் இறக்குவதற்கான ஏற்பாடுகளையும் சில கூட்டமைப்பின் மேதாவிகள் செய்வதாக கூறப்படுகிறது.
கொள்கை இல்லாத கூட்டமைப்பில் ஜெயானந்தமூர்த்தி என்ன டக்ளஸ் பிள்ளையான் கருணா என அனைவரும் வருங்காலத்தில் இணைவதை யாரும் தடுக்க முடியாது.
காரணம் கேட்டால் இனக்கம் என்பார்கள்....


https://www.jvpnews.com/srilanka/04/188122

Geen opmerkingen:

Een reactie posten