வங்கம் தந்த பாடம் - சந்ததியார்
--------------------------
இந்தியா - பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் நோக்கில் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியை - பங்களாதேஷ் என பிரித்து கொடுத்தது.
இந்தியா அதற்காக முக்திவாகினி என்ற போராளிகள் படை ஒன்றுக்கு இந்தியாவில் பயிற்சியளித்து வந்தது. இது இலங்கை போராளிகளுக்கு இந்தியா பயற்சி அளித்தற்கு சமனானது.
முக்திவாகினியினர் பலம் பெறு முன்னேயே இந்தியா - பாகிஸ்தானை தாக்கி வங்க தேசத்தை பிரித்து கொடுத்தது. அக்காலத்தில் இந்திய படையினரால் வங்க தேசத்தில் படுகொலைகளும் - பெண் வன்புணர்வு சம்பவங்களும் எல்லை தாண்டிச் சென்றன.
இதனால் முக்திவாகினியினர் இந்திய படையினருக்கு எதிராக மாறுவர் என்பதை உணர்ந்த இந்தியா - இந்தியாவில் பயிற்சியளித்த முக்தவாகினியினரை ஒட்டு மொத்தமாக படுகொலை செய்தனர்.
அதன் பின்னணியை சந்ததியார் வங்கம் தந்த பாடம் என எழுதியிருந்தார். அப் புத்தகம் தடை செய்யப்பட்டதோடு - சந்ததியார் உருவாக்கிய புளொட் அமைப்பே சந்ததியாரை படுகொலையும் செய்தது. அவரது படுகொலையின் பின்னணியில் றோவும் இருந்தான தகவல்கள் கசிந்தன.
இந்த புத்தகத்தில் சந்ததியார் அன்று என்ன எழுதினாரோ - அதுவே பின்னாளில் இலங்கைக்கு வந்த இந்திய படையினரால் இலங்கையிலும் நடந்தது.
பலர் தேடித் திரிந்த புத்தகம் - இங்கே .....
http://noolaham.net/
Geen opmerkingen:
Een reactie posten