தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 oktober 2018

வன்னியூர் செந்துரன் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு!! இதற்கு என்ன பதில்..


உங்கள் மனைவியின் இறப்பு ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று. அவரது மரணம் குறித்து உங்களுக்கே சந்தேகம் இருப்பதாக எனக்கு நீங்களே தெரிவித்து இருந்தீர்கள்.
உங்கள் மனைவியின் மரணம் குறித்து நீதி கிடைக்கவேண்டும் உண்மை நிலைநாட்டப் படவேண்டும் என்று ஒரு ஊடகவியலாளன் ஆக நான் மட்டுமல்ல பல ஊடகவியலாளர்கள் ,கல்வியியலாளர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே.
ஆனால் உங்கள் மீது சந்தேகத்தை திருப்புவதற்கு நீங்களும் ஓர் காரணமாக இருந்துள்ளீர்கள் என்பதே எனது கருத்து நீங்கள் மனநலம் சோர்ந்து இருந்தமையால் உங்களுக்கு வரும் தேவையற்ற அல்லது உங்களை மனவளுத்தங்களுக்கு உள்ளாக்கக் கூடியவாறு வருகின்ற கேள்விகளால் உங்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்திருக்கலாம் ஆனால் நீங்கள் ஏன் உங்களது முகநூலை இவ்வளவுகாலமும் முடக்கி வைத்திருந்தீர்கள்?
உங்கள் மீது ஊடகங்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாக தெரிவித்திருந்தீர்கள் சில ஊடகங்கள் அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் ஆனாலும் உங்கள் மாமி அதாவது உங்கள் மனைவின் அம்மாவே உங்கள் மீது பல குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவற்றை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன நீங்கள் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கா விடினும் உங்கள் மாமியின் குற்றச் சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியவராக இருக்கின்றீர்கள்.
உங்கள் மனைவியின் மரண செய்தி கேட்டு இறந்தவர் வன்னியூர் செந்துரனின் மனைவி என்று நான் தெரிவிக்கும் வரை யாருக்கும் தெரியாது உங்கள் மனைவி என அதன் பின்னர் என்னை அறிமுகம் செய்துகொண்டு முதன் முதலில் உங்களுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன்.
அதன் போது நீங்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதனால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தது கடந்த புதன் கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார் இரண்டு நாளும் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன் எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என கூறினார்.
அதன் பின்னர் அவரது தொலைபேசி செயற்பட வில்லை நான் நினைத்தேன் சில வேளை வேலைப்பளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என
பின்னர்தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை காணவில்லை எனச் சொன்னார் ( இது நீங்கள் உங்கள் மனைவி மீது அக்கறை அற்றவர் என எனக்கு இக் கருத்து புலப்படுத்தியது )
என்பதனையும் எனக்கு சொல்லியிருந்தீர்கள் (நானும் நீங்களும் உரையாடியதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆனால் தேவைப்படுமாயின் நீதிமன்ற அனுமதியுடன் இந்த தொலைபேசி உரையாடலை பெறலாம் என நினைகின்றேன் ) இச் செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது
ஆனால் நேற்றையதினம் நீங்கள் முகநூலில் பதிவிட்டிருக்கும் கானொளியில் இருபதாம் திகதி தன்னுடைய வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை இருபத்தோராம் திகதி சடலமாகத்தான் நான் பார்த்தேன் என கூறியுள்ளீர்கள் இக் கருத்து முன் பின் முரணானதாக இருக்கின்றது.
அதுமட்டுமல்ல உங்கள் மனைவியின் இழப்பின் போது என்னை அறிமுகம் செய்து உங்களிடம் பேசும் போது தெரிவாக பேசிய நீங்கள் இவ்விடயம் தொடர்பில் கதைத்த போது உம்மை எனக்கு தெரியாது தனித்தனியாக பேச வேண்டிய அவசியம் இல்லை ஊடக சந்திப்பை அனைத்து ஊடகங்களையும் அழைத்து ஏற்பாடு செய்யுங்கள் பதிலளிகின்றேன் என்றீர்கள்.
இந்நிலையில் நான் ஏற்பாடு செய்கின்றேன் நேரம் தாருங்கள் என்ற போது நீங்கள் முதலில் ஏற்பாடு செய்யுங்கள் நீங்கள் கேட்டும் நேரத்துக்கு வரமுடியாது சொல்கிறேன் என்று கூறியவாறு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டீர்கள் நீங்கள் செய்கின்ற ஊடக சந்திப்பை அறிவித்து பொது வெளியில் செய்யுங்கள் இது போன்ற சில கேள்விகள் என்னிடம் உண்டு நீங்கள் உங்கள் ஊடக நண்பர்களை மட்டும் அழைத்து தனிப்பட ஊடக சந்திப்பை செய்ய மாட்டீர்கள் என நம்புகின்றேன்.
உங்கள் அன்பு மனைவிக்கு பாமாலைகளை சூட்டி மகிழ்ந்த நீங்கள் ஏன் உங்கள் ஆசை மனைவியின் இறுதிக்கிரிகையின் போதும் வவுனியா சிதம்பரபுரம் மயானத்தில் சமய முறைப்படி நீங்கள் தொட்டுக் கட்டிய தாலிகழட்டுதல் அடங்கலாக மனைவிக்கு செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை செய்யத் தவறியது ஏன் கணவனின் கடமையை தந்தை செய்ததனையாவது அறிவீரா
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எவ்வாறு வேண்டும் என்றாலும் இருந்துவிட்டுப் போங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு தேவையில்லை ஆனாலும் இந்தியாவில் நடைபெற்றதாக சொல்லப்படும் சம்பவமும் அப் புகைப்படமும் தொடர்பிலே பதிலளிக்க வேண்டும் அது உங்கள் மனைவியா அல்லது உங்கள் வெளிநாட்டு மோகத்திற்காக ஓர் பெண்ணை பயன்படுத்திக் கொண்டீர்களா தயவு செய்து தெளிவு படுத்துங்கள்
உங்கள் நண்பர்களிடம் பேசினேன் நீங்கள் நல்லவர் என்பதனை ஆணித்தனமாக கூறினார் ஆனாலும் இவற்றுக்கெல்லாம் பதிலைத்தாருங்கள் இல்லை எனில் ஊடகசந்திப்புக்கு இவற்றுக்கு எல்லாம் பதில் இருந்தால் என்னையும் அழையுங்கள் சர்சைகளை தீருங்கள் உங்கள் மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள் வாருங்கள் உங்கள் மனைவியின் மரணத்த்ற்கு நீதிகிடைக்கும் வரை சேர்ந்து பயணிக்க தயாராக உள்ளேன்.
குறிப்பு உங்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்ற சிந்தனை என்னிடம் இல்லை உங்கள் மனைவியின் துயரச் சம்பவத்தின் பின்னரே முதன் முதலில் பேசியிருக்கின்றேன் தப்பட உங்களுடன் நட்புக் கூட இருக்கவில்லை.
ஒரு தடவையோ அல்லது இருதடவை எனது முகநூல் நண்பர்கள் உங்கள் கவிதைகளை பகிர்ந்த போது மட்டும் பார்த்திருக்கின்றேன் என்னிடம் இருப்பது உங்களின் சுயகௌரவத்திற்கோ மரியாதைக்கோ பங்கம் விளைவிப்பது அல்ல உங்கள் மனைவிக்கு நீதி கிடைக்க வேண்டும் பெண்ணின் நீதிக்கான பயணம் மட்டுமே என கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் SN Nibojan தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..


https://www.jvpnews.com/srilanka/04/192333?ref=ls_d_special 

Geen opmerkingen:

Een reactie posten