நேற்றைய தினம் மதியம் 2 மணிக்கு மன்னார் மாவட்டத்தில் வைத்து தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் சிவகரன் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 1 லட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 மாதங்கள் வெளிநாடு செல்ல முடியாதெனவும், மாத இறுதியில் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும், நீதிமன்றம் பணித்துள்ளதுடன், வழக்கு 10ம் மாதம் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten