தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 april 2016

தேவார பாடல் பெற்ற உண்மையான கோணேஸ்வரம் ஆலயம்



{ இலங்கையில் தேவார பாடல் பெற்ற உண்மையான கோணேஸ்வரம் ஆலயம் முற்றாகஅழிக்கப்பட்டது. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் . }

மதத்தைப் பரப்புவதற்காக பல நாடுகளின் வரலாற்றையே அழித்த புகழ் உலகின் இருபெரும் மதங்களையே சாரும். அந்த வகையில் இந்தியா மட்டுமல்லாமல், இலங்கையிலும் 500க்கும் மேற்பட்ட கோவில்கள் அழிக்கப்பட்டன.

அதில் ஒன்றுதான் திருகோணேஸ்வரம் ஆலயம். இக்கோவில் மிகவும் பழைமை வாய்ந்தது. இராமாயணம் மற்றும் மகாபாரத காவியங்களில் இக்கோவிலின் வரலாற்றைக் காணலாம். இக்கோவில் பல்லாயிர ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.மு. 300ஆம் நூற்றாண்டில் மனுநீதி சோழ மன்னன் ஒருவர் இக்கோவிலை மேம்படுத்தினார் என்ற குறிப்புகள் அக்கோவிலின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. தேவாரப் பாடல்களிலும் இக்கோவில் பாடப்படுகிறது. இத்தகு புகழ்ப்பெற்ற ஒரு கோவிலை திட்டமிட்டு சிதைத்து, பல உயிர்களைக் குடித்த பெருமை கிறிஸ்துவ போர்த்துகீசியர்களையே சேரும். பண்டைய தமிழர்களின் கட்டடக் கலைகளின் சிறப்பையும் புகழையும் நாம் இன்று அறியாதபடி செய்துவிட்டனர்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சித்திரை 1- ஆம் நாளில் (1622, ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டின் போது போர்த்துகீசிய ஜெனெரல் கொன்ஸ்தந்தினோ என்பவனால் இக்கோவில் திட்டமிட்டு தாக்கப்பட்டு முற்றுமாக அழிக்கப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் தேர் ஊர்வலங்களும் நடந்து கொண்டிருந்தன.

பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் கோவிலில் குவிந்திருந்தனர். பெரும்பான்மை இந்துக்கள் தேர் ஊர்வலத்திற்கு சென்றனர். மேலும் சிலர் கோவிலில் இருந்தனர். அவ்வேளையில் கோவிலுக்குள் ஐயர்களைப் போல் மாறுவேடம் பூண்டு நுழைந்த போர்த்துகீசிய கிறிஸ்துவர்கள் கோவிலை தாக்க ஆரம்பித்தனர். கோவிலுக்குள் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடினர்; பின்னர், கோவிலில் இருந்த சிலைகளையும் தகர்த்து எடுத்தனர்.

கோவிலில் இருந்த ஐயர்களையும் அக்கொடுமைகாரர்கள் கடுமையாக தாக்கி கொன்றனர். மேலும் சில இந்துக்கள், தேர் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட தெய்வச்சிலைகளைக் காப்பாற்றி ஆங்காங்கே புதைத்து வைத்தனர். அதன்பின்னர், பல ஐயர்களும், இதர இந்துக்களும் மதமாற கட்டாயப்படுத்தப்பட்டனர். மதமாற மறுத்தவரள் கொடுமையாகக் கொல்லப்பட்டனர்.

1624-ஆம் ஆண்டு இக்கோவில் முழுமையாக தகர்க்கப்பட்டது. கோவில் இருந்த அடையாளம் கூட இல்லாமல் அழிக்கப்பட்டது. அதன்பின்னர் இலங்கையில் எஞ்சியிருந்த ஒருசில இந்துக்கள் இக்கோவில் இருந்த இடத்தில் அடையாளத்திற்காக ஒரு தூணை எழுப்பினர்.

இக்கோவிலில் இருந்து பெயர்க்கப்பட்ட தூண்களும் செதுக்கப்பட்ட கற்களும் பின்னர் திருகோணமலை கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டது. மேலும் அவற்றைக் கொண்டு, அக்கோட்டைக்கு அருகாமையில் ஒரு சர்ச் (கிறிஸ்துவ வழிபாட்டு தளம்) அமைக்கப்பட்டது. அதன்பின்னர், கிறிஸ்துவர்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமமும் அமைக்கப்பட்டது.

கிறிஸ்துவ போர்த்துகீசிய ஆட்சியில் இலங்கையில் மட்டுமே சுமார் 500 கோவில்கள் அழிக்கப்பட்டன. பெருமளவு தமிழர்கள் கட்டாயமாக மதமாற்றப்பட்டனர்.

அந்நியனுக்கு அடிமையாகி, உயிருக்கு அஞ்சி பலர் கிறிஸ்துவர்களாக மதமாறினர். மதமாற மறுத்த அவர்களின் உறவுகள் அவர்களின் கண்முன்னாலே கடுமையாகக் கொல்லப்படனர்.

போர்த்துகீசிய ஆட்சியில் பல்லாயிரக்கணக்க ான இந்துக்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்துவ போர்த்துகீசிய ஆட்சியில் பிராம்மண-வெறுப்பு ஓங்கியிருந்தது.

இவர்களை அழிப்பது இந்து தருமத்தை ஒழித்து கிறிஸ்துவத்தைப் பரப்ப ஏதுவாக அமையும் என்பதை நம்பினர். எனவே, வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் பிராம்மணர்களைக் கொன்று குவித்தனர். இவர்களின் வம்சாவளிகளே இன்று பிராம்மணர்களை எதிர்க்கும் கூட்டங்களாக வளர்ந்துள்ளனர்.

1000 ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வைக்கப்பட்ட அக்கோவிலின் தங்கம், முத்து, விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் யாவும் கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடிக்கப்ப ட்டன. இதுவே ஆசியாவின் செல்வமிகுந்த கோவிலில் நிகழ்ந்த மிகப்பெரிய கொள்ளையாகும்.

பின்னர், 1963-ஆம் ஆண்டில் இக்கோவிலின் தெய்வச்சிலைகள் இந்துக்களால் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் இக்கோவில் எழுப்பப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten