தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 april 2016

இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் இலங்கையில் கைது

போலியான கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் ஒருவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரிவினரால் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான இந்த நபர் 2013 ஆம் ஆண்டு இத்தாலி சென்றிருந்தார். வீசாவை புதுப்பிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு வரவேண்டியிருந்தது.
எனினும் வீசா புதுப்பிக்க வராது, சந்தேக நபர் மோசடி ஒன்றை செய்திருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் செல்ல முயற்சித்த இலங்கை பெண்ணொருவர் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten