இது தொடர்பில் ஜப்பானின் சட்டத்தரணிகள் சங்க வலையமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று அந்தநாட்டின் நீதியமைச்சரிடம் ஆட்சேபனை கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
இந்த செயற்பாடு, ஜப்பானிய குடிவரவுத்திணைக்களத்தின் ஆளுமையற்ற செயற்பாடு என்றும் சட்டத்தரணிகள் வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் பல்வேறு தடவைகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர் தொடர்பில் சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு இணங்க பல மனிதாபிமான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
அத்துடன் ஒரு நாட்டில் குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியுள்ள ஒருவரையே சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நாடு கடத்த முடியும்.
அத்துடன் குறித்த அகதி, சட்டநடவடிக்கைகளுக்கு தயாராகிறாரா? என்பது தொடர்பில் குடிவரவுத்திணைக்களம் ஆராயவில்லை.
அது தொடர்பில் சட்டத்தரணிகளுடனும் தொடர்புக்கொள்ளவில்லை. இந்தநிலையில் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
40 வயதான குறித்த இலங்கையர் குறுகிய கால வீசாவை பெற்றுக்கொண்டு 1999ஆம் ஆண்டு ஜப்பான் வந்துள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்புவதற்கு மறுத்து ஜப்பானிலேயே தங்கியுள்ளார்.
சட்டத்தரணிகளின் தகவல்படி குறித்த தமிழர் தமது 15 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.
ஆயுதங்களை இடத்துக்கு இடம் கொண்டு செல்வது மற்றும் காயப்பட்டவர்களுக்கு உதவுவது என்பதே அவரின் கடமைகளாக இருந்துள்ளன.
இந்தநிலையில் 1995ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் இருந்து விலகியபின்னர் சுமார் 10 தடவைகள் படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை தமக்கு ஜப்பானில் அரசியல் அடைக்கலம் கோரமுடியும் என்று 2007ஆம் ஆண்டே அவருக்கு தெரியவந்தது.
எனினும் அவரின் விண்ணப்பம், அவர் வீசா முடிவடைந்து நீண்டநாள் நாட்டில் தங்கியிருந்தார் என்ற ஒரே காரணத்தின் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வசித்தபோது குறித்த தமிழர் தம்முடன் சயனைட் குப்பியையும் வைத்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு தமது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜப்பான் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்த போதும் சயனைட் குப்பியை வைத்திருந்தமையின் அடிப்படையில் அவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்பதை அடையாளப்படுத்த முடியும் என்று அரசத்தரப்பு வாதிட்டுள்ளது. அத்துடன் அவரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து அவர் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதியன்று குடிவரவு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு நாடு கடத்தப்படவிருந்தார். எனினும் அவர் அதற்கு மறுத்து தூக்க வில்லைகளை உட்கொண்டார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கிருந்த திரும்பியதும் பெப்ரவரி 26ஆம் திகதியன்று சட்டத்தரணிகளிடம் வழக்கு தொடர்வதற்கான ஆவணங்களை கைளித்துள்ளார். எனினும் அடுத்த நாளே அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmuyETZSXlv5H.html
Geen opmerkingen:
Een reactie posten