தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 februari 2016

சனல்4 வெளியிட்ட ஆவணப்படத்தில் எனது மகன் காணப்பட்டான்! கண்ணீர் சிந்திய தாய் !


இலங்கையில் இடம்பேற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் என்னுடைய மகன் இருக்கிறான் என தாய் ஒருவர் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஐனாதிபதி ஆணைக்குழு முன் அடையாளம் காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த்து.
இதன் போதே குறத்த தாய் தனது மகனை அடையாளம் காண்பித்துள்ளார்.
தனது மகன் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் காணாமல்போனார்.
பின்னர் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்கவில்லை. இந் நிலையில் 2013ம் ஆண்டு சனல்- 4 வெளியிட்ட இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான புகைப்படம் ஒன்றில் எனது மகன் இருக்கின்றான்.
படையினர் பிடியில் சில ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் உள்ள புகைப்படத்தில் எனது மகன் இருக்கிறான் என அந்த புகைப்படத்தை காண்பித்தார்.
இந்நிலையில் தாயார் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நடராசா மலர் என்ற தாய் தனது மகன் ந.சற்குணராசா என்ற மகன் தொடர்பாக சாட்சியம் வழங்கும்போது,
2006.09.22 ம் திகதி எனது மகன் கடைக்கு சென்றபோது படையினர் கைது செய்தார்கள். இதன் பின்னர் நான் வறணி படைமுகாம் சென்று விசாரித்தேன். அங்கிருந்த படையினர் தாங்களே எனது மகனை கைது செய்ததாக சொன்னார்கள்.
பின்னர் எனது மகன் தொடர்பாக புத்தூர் படைமுகாமில் என்னிடம் விசாரித்தார்கள். அதற்குப் பின்னரும் மகன் தொடர்பான தகவல்கள் இல்லை.
இந்நிலையில் படையினரின் சீருடையில் படையினருடன் எனது மகன் திரிந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள். நானும் பார்த்தேன். ஆனால் மகன் தொடர்பான தகவல்கள் இல்லை.
இந்நிலையில் என்னுடைய மகன் உயிருடன் இருக்கிறான். சிறையில் அல்லது படைமுகாம் ஒன்றில் அவன் உயிருடன் இருக்கவேண்டும். எங்களை சிறைச்சாலைக்கும், படைமுகாமிற்கும் சென்று பார்க்க அனுமதியுங்கள். பின்னர் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
இல்லை என்னுடைய மகன் இறந்து விட்டான் என்றால் எதற்காக கொன்றார்கள் என்பது எனக்கு கூறப்படவேண்டும் என அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
இங்கு சாட்சியளித்த மற்றொரு தாய் குறிப்பிடுகையில்,
புலிகள் இயக்கத்தில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட என் மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டேன் ஆனால் என்னுடைய மகள் பெயரில் எவரும் இல்லை என கூறி என்னை வெளியேற்றிவிட்டார்கள் என்றார் சிவலிங்கம் அனுசியா தொடர்பாக சாட்சியமளித் தாய்.
2007.11.23ம் திகதி புலிகள் இயக்கத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டார். இந்நிலையில் அவருடனான தொடர்பு முழுவதுமாக இல்லாமல்போய் விட்டது. இந்த நிலையில் நாங்கள் இடம்பெயர்ந்து பின்னர் எங்கள் ஊருக்கு வந்து விட்டோம்.
எனினும் பிள்ளை தொடர்பான எந்த தகவலும் இல்லாத நிலையில் 2014 ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் என்னுடைய மகள் சிறைச்சாலை உடையில் அழைத்துச் செல்லப்பட்டதை நான் கண்டேன்.
ஆனால் என்னுடைய மகள் என நான் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்த காவலரிடம் இவர்கள் எங்கே போகிறார்கள் என கேட்டபோது அவர்கள் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுகிறார்கள் என கூறினார். என்னுடைய மகளை மீட்டுக் கொடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmuyCRdSWeuzA.html

Geen opmerkingen:

Een reactie posten