தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 februari 2016

மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் குமார் குணரட்னத்தை 100 நாட்களாக தடுத்து வைத்துள்ளனர்: விக்ரமபாகு

ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நாடுகளுக்கு சென்று அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறினாலும் மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற இவர்கள் குமார் குணரட்னத்தை கடந்த 100 நாட்களாக தடுத்து வைத்துள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன தெரிவி்துள்ளார்.
குமார் குணரட்னத்தை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருப்பதற்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் முன்னெடுக்கப்படும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இடதுசாரி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.
இதில் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, சோலிசக் கட்சியின் சார்பில் மகிந்த தேவகே, இடதுசாரி குரல் அமைப்பின் சார்பில் தர்மசிறி லங்காபேலி உட்பட பல இடதுசாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட விக்ரமபாகு கருணாரட்ன,
ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகின்றனர்.
ஜனநாயகம்,மனித உரிமைகள் பற்றி பெரிதாக பேசும் இவர்கள் குமார் குணரட்னத்தை 100 நாட்களாக தடுத்துவைத்துள்ளனர்.
குமார் குணரட்னம் போன்ற அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு என்ன கிடைக்கின்றது என்று நாங்கள் கேட்கிறோம்.
இதனால், குமார் குணரட்னத்தை விடுதலை செய்து அவரது அரசியல் உரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய மகிந்த தேவகே,
குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
விமல் வீரவன்ஸவுக்கு இரண்டு கடவுச்சீட்டுகள் இருந்தன. எனினும் வீரவன்ஸ விடுதலை செய்யப்பட்டார். கோத்தபாய, பசில் போன்றவர்களுக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன.
இவை பிரதமருக்கு பிரச்சினையில்லை. ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்று அரசியல் பிரச்சினை காரணமாக அங்கு சென்றுள்ளவர்களை நாட்டுக்கு வருமாறு அழைக்கின்றனார். இலங்கைக்கு வந்த குமார் குணரட்னத்தை கைது செய்துள்ளனர். இது கேலிக்கூத்தானது என்றார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய தர்மசிறி லங்காபேலி,
மக்கள் விடுதலை முன்னணியில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாகவே குமார் குணரட்னம் வெளிநாடு செல்ல நேர்ந்தது. யார் என்ன கூறினாலும் விஜித ஹேரத், அனுரகுமார திஸாநாயக்க போன்றவர்களை அரசியலுக்கு கொண்டு வந்தவர் குமார் குணரட்னம்.
துரதிஷ்டவசமாக அவர்களுக்கு குமார் குணரட்னத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பேசுகின்றனர். இடதுசாரி குரல் அமைப்பு என்ற வகையில் நாங்கள் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் குமாரின் அரசியல் உரிமைகளுக்கா குரல் கொடுப்போம் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyCRVSWfwyA.html

Geen opmerkingen:

Een reactie posten