வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எமது இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ராதா வான்காப்பு படையணி தளபதி லேப் கேணல் ஜெகன் மாஸ்டர் இனம் காணப்பட்டுள்ளார்
புதியவன் மாஸ்ரர் அடையாளம் காணப்பட்டுள்ளார் � மைத்துனர் தகவல். �
வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
கட்டளைத் தளபதி கேணல் பானு, கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேல் ரமேஸ் ஆகியோர் வரிசையில் விடுதலைப் புலிகள் மற்றொரு அங்கத்தவரான புதியவன் மாஸ்ரர் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகனேசன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1989ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த இவர், மத்திய குழு அங்கத்தவரும், மூத்த உறுப்பினருமான சந்தோஸ் மாஸ்ரரின் சகோதரனாகும்.
இவரது மனைவியும் கள மருத்துவத்திற்குப் பொறுப்பாக இருந்த ஒரு நீண்டகால மூத்த போராளியாக இருந்தவர். அவரது பாதுகாப்புக்கள் கருதி மேலதிக விபரங்கள் தவிர்க்கப்படுகின்றன
கேணல் கஜன் என அழைக்கப்படும் சோதிராஜ் விமலவர்ணன் அடையாளம் காணப்பட்டுள்ளார். �
இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைத்து முன்னால் யாழ் மாவட்ட தாக்குதல் படை பிரிவு தளபதியாகவும் , கிட்டு பிரங்கி படை அணி துணை தளபதியாகவும், மட்டகளப்பு துணை கட்டளை தளபதியாகவும் அதன் பின்பு இறுதி நேரத்தில் தாக்குதல் தளபதியாகவும் விசேட தளபதியாகவும் பணியாற்றி. முள்ளிவாய்க்கல் முள்ளியவளை பகுதியில் தாக்குதல் தளபததியாக பணியாற்றி சிங்கள முற்றுகையை உடைத்து வெளியேறும் போது 17 .05 .2009 ம் ஆண்டு வீரகாவியம் ஆனார் .
|
Geen opmerkingen:
Een reactie posten