இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைய கொடூரமாக படுகொலை செய்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இன்னுமொரு ஆதாரமும் வெளிவந்துள்ளது.
கேணல் ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கடந்த புதன்கிழமை வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றிய திலக் என அழைக்கப்படும் சிவலிங்கம் சுகுணன் என்பவரையும் இராணுவம் படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது. இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார்.
பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.
திலக், தான் சாதாரண உடையில் சரணடையப்போவதாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். சரணடைந்த திலக்கை இராணுவத்தினர் கொடூரமாக அடித்து படுகொலை செய்துள்ளனர்.
இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியதுடன் இதன் பணிப்பாளராந திலக் பிரான்ஸ்,ஜோ்மனி, நோர்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 |
Geen opmerkingen:
Een reactie posten