மீறல்கள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 1 mei 2011
கேணல் ரமேசின் உடலத்தை மனைவி உறுதிப்படுத்தினார்
(செவ்வியினை ஒலியில் கேட்க)
சிறீலங்கா படைகளால் அடித்து, வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசின் உடலத்தை அவரது மனைவி வத்சலாதேவி துரைராஜசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மெல்லிய உடல்வாகுகொண்ட கேணல் ரமேஸ் அவர்களை படையினர் அடித்துப் படுகொலை செய்திருப்பதால், அவரது முகம் மற்றும் உடல் வீங்கிய நிலையில் இருந்ததால் உடலத்தை உறுதிப்படுத்துவதில் சில சந்தேகங்கள் நிலவிய பின்புலத்தில் உடலத்தை மனைவி உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசும் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும், இதுவும் போர்க்குற்ற ஆதாரம் எனத் தெரிவித்து இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
நிழற்படத்துடன் வெளியிடப்பட்டிருந்த இந்தச் செய்தியில், குறிப்பிட்ட அந்த நிழற்படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ரமேசின் மனைவியை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி வத்சலாதேவியின் பாதுகாப்புக் கருதி அவர் இருக்கும் இடம், மற்றும் சில தகவல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய ஊடகங்களும் தான் கூறியுள்ள தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தினால், தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் அதில் தன்னால் சாட்சியம் அளிக்க முடியும் எனவும் அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten