தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 mei 2011

உயிருடன் பிடித்த பின்னரே பின்லேடனை சுட்டுக்கொன்றனர் ஒசாமாவின் மகள் தெரிவிப்பு

 
[ வியாழக்கிழமை, 05 மே 2011, 08:24.28 AM GMT ]
பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அல் கைதா அமைப்பின்  தலைவர் ஒசாமா பின்லேடனை உயிருடன் பிடித்த பின்னரே அமெரிக்க படையினர் அவரை சுட்டுக்கொன்றதாக ஒசாமாவின் 12 வயதான மகள் கூறியுள்ளார்.
தனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதையும் அதன் பின்னர் அவரின் உடல் ஹெலிகொப்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டதையும் 12 வயதான அந்த மகள் பார்த்ததாக பாகிஸ்தானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அரேபிய செய்தி கட்டமைப்பான அல் அரேபியா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத் தொகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் மீதோ அவர்களின் ஹெலிகொப்டர்கள் மீதோ ஒரு துப்பாக்கிச் சன்னங்கள் கூட பாய்ந்திருக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறினாலேயே அவர்களின் ஒரு ஹெலிகொப்டர் விழுந்து மோதியுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மோதல் நடந்ததாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் விடயங்களை அவர் நிராகரித்திருப்பதாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.
உயிர் தப்பிய பின்லேடனின் ஆறு பிள்ளைகள் மற்றும் மனைவிமாரில் ஒருவர் உட்பட அவரின் உறவினர்கள் ராவல்பிண்டியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அரபு செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அமால் அல் சாடா (27 வயது) என்ற பின்லேடனின் இளைய மனைவியின் காலின் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. ஆனால், அவர் தப்பிவிட்டார். முன்னர் பின்லேடன் ஏக்.கே. 47 துப்பாக்கியை வைத்திருந்ததகவும் தனது மனைவியை மனிதக் கேடயமாக வைத்திருந்த போது சுடப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால், பின்னர் பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார் என வெள்ளைமாளிகை செவ்வாய் இரவு கூறியிருந்தது. இந்த இருவேறுபட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றன. பின்லேடனின் இளைய மனைவியான அல்ஷாடா 17 வயதாக இருக்கும் போது ஆப்கானிஸ்தானில் அவரைத் திருமணம் செய்துள்ளார். யேமனில் பிறந்த அப்பெண்ணுக்கு அந்த நாட்டுடன் பின்லேடனுக்கு தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக செய்துவைக்கப்பட்ட திருமணம் என கூறப்படுகிறது.
தனது மனைவியை யேமன் வீட்டிற்கு பின்லேடன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்த போதும் அப்பெண் திரும்பி வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 2005 லிருந்து அபோட்டாபாத்திலுள்ள மாளிகையில் தான் பின்லேடனுடன் வாழ்ந்துவருவதை அப்பெண் பாகிஸ்தான் விசாரணையாளர்களுக்குக் கூறியிருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten