கடாபி அமெரிக்க எதிராளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக
ஜனநாயக மீட்பு என்றபெயரில் நேட்டோ செய்யும் அட்டகாசத்துக்கு முடிவேயில்லை
போலிருக்கிறது.இவர்களேஅதிகார வெறிபிடித்தவர்கள்,இவர்களால் சாதாரண
வேற்றுநாட்டு மக்களுக்கு சுதந்திரமாவது,கிடைப்பதாவது.அடக்கியாளுவதை ,அந்நிய நாடுகளில் அறிமுகப்படுத்தியதே பிரிட்டனும் பிரான்சும்தான். இவர்களை நம்பி புரட்சயை தொடங்கியவர்கள் இவர்களின் கைக்கூலிகளே
தவிர மக்களை சுதந்திரத்துக்கு இட்டுச்செல்லும் புனிதர்களல்ல என்பதை காலம்தான் உணர்த்தவேண்டும்.பாவம் மக்கள்!!

தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி: சர்ச்சை தீர்ந்தது
[ வெள்ளிக்கிழமை, 13 மே 2011, 04:13.23 மு.ப GMT ]
லிபியாவில் நேட்டோ படைகளின் கடுமையான தாக்குதலை தொடர்ந்து கடாபி பற்றிய தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்நிலையில் திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
லிபியாவில் கடாபியை எதிர்த்து கடந்த மூன்று மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் 30ம் திகதி திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது நேட்டோ படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில் கடாபியின் இளைய மகன் மற்றும் மூன்று பேர குழந்தைகள் பலியாயினர். இந்நிலையில் கடாபி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த சர்ச்சை நீடித்து வந்தது.
சர்ச்சையை தீர்க்கும் வகையில் கடந்த புதன்கிழமை திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அல் ஜமாஹிரியா என்ற தொலைக்காட்சியில் பழங்குடியின தலைவர்களுடன் கடாபி உரையாடுவது போன்ற காட்சி காட்டப்பட்டது. அப்போது,"லிபியன் பழங்குடியினரின் பிரதிநிதிகள் நாம் என்பதை உலகிற்கு காட்டுவோம்" என்று கடாபி கூறினார். பதிலுக்கு கூட்டத்தில் இடம் பெற்ற பழங்குடியின பெரியவர் ஒருவர், "நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று கடாபியை பார்த்து கூறினார்.
கூட்டத்தை முன்னிட்டு ஹோட்டலின் சில அறைகள் சீல் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஹோட்டலில் கடாபியின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை அறிந்த நேட்டோ படையினர் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் ஹோட்டலின் ஜன்னல்கள் பழுதடைந்தன. லிபியா கிளர்ச்சியாளர்களுக்கு உதவ அமெரிக்கா 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து இருந்தது. இதில் ஒரு பாகமாக முதன் முதலாக கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலங்கள் லிபியா வந்து சேர்ந்தன.
Geen opmerkingen:
Een reactie posten