அகதிகள் பிரச்சினையால் பதவியையும் அரசியல் வாழ்வையும் துறக்கும் நிலை ஏற்பட்ட பின்னரும், ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் அகதிகளுக்கு நன்மை விளைவிக்கும் செயல் ஒன்றை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது நன்றாக பணியாற்றும் திறன்வாய்ந்த அகதிகளுக்காக ஒரு புதிய சட்டத்தையே அவர் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அல்லாத ஒரு நாட்டிலிருந்து வருவோர், பணியிடம் ஒன்றிற்கு, அப்பணியைச் செய்யும் திறன் கொண்ட ஜேர்மானியர் ஒருவர் இல்லாத பட்சத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் இனி அவ்வாறில்லை, அது மட்டுமின்றி இந்த விதிமுறை எந்த துறையில் பணியாளர்கள் தேவை இருக்கிறதோ, அந்த துறைசார் மக்கள் மட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட பணித்தகுதியுடைய யார் வேண்டுமானாலும் எந்த பணிக்காக வேண்டுமென்றாலும் ஜேர்மனிக்குள் வேலை தேடி வரலாம்.
அதேபோல், பணித்திறன் கொண்டவர்கள் ஜேர்மனிக்கு வந்து ஆறு மாதங்கள் வேலை தேடலாம், பகுதி நேர பணி செய்யலாம்.
அவர்களால் ஜேர்மன் மொழி பேசவும், தங்களுக்கான செலவுகளை சந்திக்கும் வகையில் ஏதாவது வருவாயை ஏற்படுத்திக் கொள்ளவும் முடிந்தால் போதுமானது.
ஆனால் ஏஞ்சலா மெர்க்கலின் இந்த திட்டத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் ஒலிப்பதையும் மறுப்பதற்கில்லை.
https://news.lankasri.com/germany/03/192614?ref=ls_d_germany

Geen opmerkingen:
Een reactie posten