தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 mei 2016

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வை புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர்!

முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு தினம் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின், பிரதான வைபவம் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட போதும் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் இதுவரை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை பெற்ற நிலையில் இம்முறை செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may like this video

Geen opmerkingen:

Een reactie posten