மலேசியாவின் பெனாங் மாநிலத்தின் உதவி முதலமைச்சர் பி.ராமசாமி ப்ரீ மலேசியா டுடே ஊடகத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலை அரசியல்வாதிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சுற்றுலாத்துறையினருக்கும் நன்மைகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
எனினும் தமிழர்கள் இன்னும் வருந்திக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கொடுமையான அரசியல் நடவடிக்கைகளே விடுதலைப்புலிகளை முன்னிலைக்கு கொண்டு வந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்
தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள், இனப்படுகொலைகள், கல்வி மற்றும் தொழில்களில் காட்டப்பட்ட புறக்கணிப்புக்களே விடுதலை இயக்கம் உருவாக காரணமாக அமைந்தது.
தற்போதைய நிலையில் இலங்கையில் தமிழர்கள் இன்னும் வடக்கு மற்றும் கிழக்கில் உரியமுறையில் மீள்குடியேற்றப்படவில்லை.
இந்நிலையில் சமாதான ஈவுத்தொகையை பற்றி பேசுவது கடினமானது என்றும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு கூறிவரும் இலங்கை அரசாங்கம்,போரின்போது மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான கொலைகள், காணாமல் போகச்செய்யப்பட்டமை பெண்கள் மீது பாலியல் சித்திரவதை என்பவை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதில் தோல்விக்கண்டுள்ளது.
இந்நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நாடுகள் கோரிக்கை விடுக்கின்றபோதும் இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை என்று பி.ராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten