ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து ஒரு கூட்டணி நாடாக இல்லையென்றாலும் கூட, குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள அகதிகளுக்கு புகலிடம் வழங்க தயார் எனஅறிவித்தது சிரியா, இலங்கை, ஈராக்,ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு நற்செய்தியாக அமைந்தது.
இதன் அடிப்படையில், 50,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க சுவிட்சர்லாந்து நாடு ஒப்புக்கொண்டது. ஆனால், இதற்கு சுவிஸில் உள்ள 26 மாகாணங்களும் ஒப்புக்கொள்ள வேண்டுமே?
அரசின் திட்டப்படி, ஒவ்வொரு மாகாணமும் ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு, ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு நகரம் மற்றும் கிராம நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Oberwil-Lieli (சூரிச் மாகாணத்திற்கு வெளியே10 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது) என்ற கிராம மக்கள் அகதிகளை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் 2,200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 300 பேர் கோடீஸ்வரர்கள். இந்த கோடீஸ்வரர்கள் தான் தற்போது அக்கிராம மக்களை தூண்டிவிட்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், ஆர்கவ் மாகாணம் இந்த கிராமத்திற்கு ஒதுக்கியுள்ள அகதிகளின் எண்ணிக்கை 10 பேர் தான். இந்த 10 புலபெயர்ந்தவர்களை ஏற்க தான் இவர்கள் மறுத்து வருகிறார்கள்.
சுவிஸ்சட்டப்படி, அரசு அறிவித்துள்ள எண்ணிக்கை கொண்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்காவிட்டால், அந்த குறிப்பிட்ட கிராமமக்கள் அரசுக்கு 2,00,000 பவுண்ட்(4,30,17,957 இலங்கை ரூபாய்) அபராதம் அளிக்க வேண்டும்.
தற்போது இந்த கிராம மக்கள் ’10 புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதை விட அபராதம் கட்டதயா ர்’எனக் கூறியுள்ளனர்.
இதன் பின்னணியில் மேலே கூறிய அந்த 300 கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஏனெனில், இந்த அபராதத்தின் பெரும்பகுதியை அவர்களே கட்ட தயாராக உள்ளதாக பொதுமக்களை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்னர் ஒரு பொதுவாக்கெடுப்பு இந்த கிராமத்தில் நடத்தப்பட்டது.
அதில்,’10 புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம்’ என 52 சதவிகித மக்களும் ‘அவர்களுக்கு ஆதரவு தர தயார்’என 48 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பின் மூலம், தற்போது இந்த கிராமத்தில் 10 புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளிக்க இந்த கிராம மக்கள் மறுக்க ஒரே காரணம் ‘அகதிகள் குடியேறினால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது’என்பது தான்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேசியபோது, ‘இந்த கிராமத்தில் நாங்கள் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.
சுவிஸில் உள்ள மற்ற கிராமங்களை ஒப்பிடுகையில் இங்கு குற்றங்கள் நடப்பது மிக மிககுறைவு.
ஆனால், ஜேர்மனியில் உள்ள கலோங்க் நகரில்புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்காணக்கான பெண்கள் மீது புலம்பெயர்ந்த ஆண்கள் பாலியல் தாக்குதலை நடத்தியது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவம் இந்த கிராமத்தில் நிகழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
மேலும், புகலிடம் வரவுள்ள அந்த 10 பேர்எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே, அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும் நாங்கள் அஞ்சுகிறோம்’ என கவலை தெரிவித்துள்ளார்.
இதே காரணத்தை தான் பலதரப்பட்ட பெண்களும்கூறியுள்ளனர். அதாவது, ஜேர்மனியில் புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்பட்ட பாலியல் அட்டூழியம் சுவிஸில் குடியேறவுள்ள புலம்பெயர்ந்தவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
எனினும், இந்த கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக வாக்களித்த அந்த 48 சதவிகித மக்களும் ’இக்கிராம மக்கள் தங்களது முடிவினை மாற்றிக்கொண்டு புலம்பெயர்ந்தவர்களை வரவேற்று புகலிடம் அளிக்க வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten