தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 mei 2016

அகதிகளுக்கு எதிராக செயல்பட்ட பெண் எம்பியின் முகத்தில் சொக்லேட் கேக்கினை பூசிய இளைஞர்!

ஜேர்மனில் அகதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த பெண் எம்பியின் முகத்தில் அகதிகள் ஆதரவு அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் சொக்லேட் கேக்கினை தடவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் கட்சியை சேர்ந்த எம்பியான Sahra Wagenknecht, தொடர்ந்து அகதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துவந்துள்ளார்,
பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகள் வருகை தருவதன் காரணமாகத்தான், ஜேர்மனில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமின்றி, எந்தெந்த நாடுகளில் இருந்து அகதிகள் அதிகமாக வருகின்றனர், அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற புள்ளிவிபரத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார், இவரின் இந்த செயல்பாடுகள் அகதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் "anti-fascist" அமைப்பினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜேர்மனியில் கட்சி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த ஆதரவாளர் ஒருவர், Wagenknecht முகத்தில் சொக்லேட் கேக்கினை தடவியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண் எம்பியும், பிற உறுப்பினர்களும் தடுமாறியுள்ளனர், அதன் பின்னர் அக்கட்சியின் உறுப்பினர்கள் அவரது முகத்தில் இருந்த கேக்கினை ஒரு துணியால் சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயற்சிக்கையில், எடுக்க வேண்டாம் என கூறி ஜாக்கெட்டை வைத்து மறைத்துள்ளனர்.
இந்த செயல் குறித்து ஆதரவாளர் கூறியதாவது, அகதிகளுக்கு எதிராக இவர் செயல்பட்டு வருவது மிகவும் மனிதாபிமானமற்ற செயலாக உள்ளது என கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten