தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 januari 2012

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நெதர்லாந்தில் தற்கொலை செய்த இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளைக்கு அஞ்சலி

 
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 08:14.39 AM GMT ]

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக நெதர்லாந்து சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த போது தற்கொலை செய்து கொண்ட இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளைக்கு லங்காசிறி வானொலி தனது அஞ்சலியை செலுத்துகின்றது.
தமிழனுக்கென்றொரு நாடு இல்லை தமிழன் இல்லாத நாடும் இல்லையென்பது நாம் யாவரும் அறிந்ததே.
ஐக்கிய இலங்கையில் சிங்கள மக்களுடன் வாழ முடியாதென பல உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் கைவிடப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாக அன்றைய தமிழ்த் தலைவர்களான தந்தை செல்வா போன்னோர்கள் வெளிப்படையாகவே அறிவித்ததுடன் தமிழர்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென தெரிவித்து விட்டது இன்று எவ்வளவு உண்மையென்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இருந்து தம்மைப் பாதுகாக்க புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோருகின்றவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதுடன் அவர்களை சில நாடுகள் நாடு கடத்த முற்படுவதானது பாதிக்கப்பட்டவர்களை கொலை செய்வதற்கு சமனாகும்.
அவ்வாறு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக நெதர்லாந்து சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த போது தற்கொலை செய்து கொண்ட இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளைக்கு லங்காசிறி வானொலி தனது அஞ்சலியை செலுத்துகின்றது.
இலங்கையில் உயிராபத்தை எதிர் நோக்கிய பலருக்கு வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து மறுக்கப்படுவது தொடர்பில் உலகெங்கும் ஒலிபரப்பாகும் லங்காசிறி வானொலியில் நேற்று ஒலிபரப்பான லங்காசிறியின் இன்றை பார்வையினை நீங்கள் கேட்கலாம்.
தயாரிப்பு லங்காசிறி வானொலி

Geen opmerkingen:

Een reactie posten