தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 januari 2012

இலங்கையில் நெதர்லாந்து நாட்டுப் பெண் மீது துஸ்பிரயோகம்


[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 04:40.39 AM GMT ]

இலங்கையில் நெதர்லாந்து நாட்டு பெண் ஒருவர் மீது, மாத்தறையில் வைத்து ஹோட்டல் உரிமையாளரால் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று நெதர்லாந்து தூதரகத்தின் முதலாவது செயலாளர் Jaco Beerends தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளின் பாதுகாப்பு விடயத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நெதர்லாந்தின் தம்பதியர் மாத்தறை பொல்ஹென என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, 25 வயதான தமது மனைவியை ஹோட்டலில் இருக்க செய்து விட்டு கணவர் சந்தைப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளரால் குறித்த நெதர்லாந்து பெண் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது கணவர் திரும்பி வந்ததும் தம்மீது ஹோட்டல் உரிமையாளர் குற்றம் புரிந்தமையை மனைவி கூறியதை அடுத்தே மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும், மாத்தறை பொலிஸார் ஹோட்டல் உரிமையாளரை கைதுசெய்தபோதும் பின்னர் விடுதலை செய்து விட்டனர்.
அதேநேரம் நெதர்லாந்து தம்பதியினரும் உடனடியாகவே நாடு திரும்பிவிட்டதால் இந்தப்பிரச்சினை நடந்து ஒரு மாதமாகியும் தற்போதே இது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten