1
2
3
4
5
6
7
8
9
10
11
புலி ஊடகத்துறையின் புலிகளின் இறுதிப்போர் பற்றிய செய்தி!
பிரிட்டனின் சனல்4 காணொளியின் பயங்கரமான படுகொலைக் காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றமை இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் உறுதியாக செயற்படவேண்டுமென்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் செய்தி அலைவரிசைகளில் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பிரபல்யமானவர்கள் இந்தக் காட்சிகள் தொடர்பாக தமது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, இந்த ஒளிநாடாவானது போலியானதென கொழும்பிலிருந்து செய்மதித் தொடர்பு மூலம் இலங்கையின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.
கொலைக்களங்கள் ஒளிநாடாவை நான் பார்த்தேன். பொது மக்கள் மீது மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டமையை கூறுவதற்கு அதிர்ச்சியாக உள்ளது.
ஐ.நா.வும் ஏனைய சர்வதேச முகவரமைப்புகளும் அவதானித்துக் கொண்டிருந்தமைக்கு அப்பால் என்ன செய்து கொண்டிருந்தன? எனக்குத் தெரிந்த காரணத்தை இறந்த ஆன்மாக்கள் அறியவேண்டுமென நான் விரும்பியிருந்தேன்.
இது குறைந்தளவில் அவர்களுக்காக என்னால் செய்ய முடிந்தது என்று ஜோதி என்பவர் கூறியுள்ளார்.
அங்கு யாவுமே விட்டுவிடப்படுமா? ஏதோ ஒரு வழியில் இலங்கையால் செய்யப்படுவதற்கு ஏதாவது செய்யப்படுமா? இந்த மாதிரியான கொடுமைகள் இடம்பெற்றதென்ற உண்மையை எனது வாழ்வில் நான் பெற்றுக்கொள்ள முடியாது என்று சென்னையிலுள்ள சிரேஷ்ட கல்வி ஆலோசகர் ஸ்வரூப் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு தொலைக்காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான மனங்களை பிரதிபலிப்பதாக அவரின் கருத்து அமைந்திருந்தது. உலகின் பல நகரங்களில் ஒரே நேரத்தில் ஒளிநாடா காண்பிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா.மீதும் முன்னணி நாடுகள் மீதும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனை மேற்கொண்டிருந்தனர்.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலி நிலையங்கள் இந்த கொடூரமான ஒளிநாடா தொடர்பான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன என்று அவுஸ்திரேலியாவிலுள்ள இன்பத்தமிழன் வானொலியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கூறியுள்ளார். கேள்விகள் உரத்தும் தெளிவாகவும் கேட்கப்படுகின்றன. இப்போது சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகின்றது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். இந்த விடயத்தை வலுவாக கவனத்திற்கு எடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு டில்லியை அவர் வலியுறுத்துவதையிட்டு நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
உங்கள் சட்டசபையில் அவர் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அத்துடன் இந்தியாவினால் பொருளாதாரத்தடை விதிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர்கள் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரை போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையும் பொருளாதாரத்தடை விதிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார் என்று உலகத் தமிழர் பேரவையின் சார்ள்ஸ் அன்டனி தாஸ் கூறியுள்ளார்.
லண்டனில் ஜூலை 5 இல் உலகத் தமிழர் பேரவை மாநாடு இடம்பெற்றது. அங்கு உயர்மட்ட பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தனர்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போதும் மிகக் குறுகிய காலத்திற்கே உண்ணாவிரதமிருந்தது போன்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வழிமுறைகளில் சலிப்படைந்தவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்படுவதுடன், தற்போது ஜெயலலிதாவுடன் வலுவான நேசஅணியைக் கொண்டிருப்பது தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள்.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு துரிதமான புனர்வாழ்வை அளிக்கவேண்டுமென்ற சர்வதேசத்தின் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு புதுடில்லி மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஜெயலலிதா மீது புதிய எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டுள்ளனர்.
விரைவில் தமிழக முதலமைச்சரை சந்தித்து அவருக்கு நன்றி செலுத்த நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்று அன்டனி தாஸ் டெக்கான் குரோனிக்கிளுக்குக் கூறியுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten