05 July, 2011
ஏழே வயதான சிறுவன் ஒருவனைக் கட்டிவைத்ததோடு, அவனை இரவு முழுவதும் அறைக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த சம்பவம் ஒன்று கலகெடிஹெனவிலுள்ள, சப்புகஸ்தென்னவில் நடந்துள்ளது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்குக் கொடுத்த தகவலை அடுத்து வீட்டைச் சோதனை செய்த போலீசார் சிறுவனை மீட்டு, வட்டுப்பிட்டிவல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சிறுவனின் தாயார் ஒரு நடன ஆசிரியை எனத் தெரியவந்துள்ளது. அவர் தற்போது கர்ப்பமாக உள்ளாராம். அதோடு சிறுவனுக்கு தந்தை இல்லை. மாற்றாந்தந்தையுடனேயே வசித்து வந்துள்ளார். இவர் அரசாங்கப் பாடசாலை ஒன்றில் ஆங்கில ஆசிரியராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சிறுவன் வீட்டுக்குள் சிறுநீர் கழித்ததால், அவனை அடித்து உதைத்து, அறைக்குள் பூட்டிவைத்துள்ளார் தாயார். இச் சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. நாள் பட்ட காயங்களைப் பார்க்கும்போது சிறுவன் சிறுவயதில் இருந்தே சித்திரவதைகளை அனுபவித்து வந்திருக்கிறான் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது தாயையும், மாற்றாந்தந்தையையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது.
இவர்கள் இருவரும் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:
Een reactie posten