தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 mei 2021

மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டிய பல்கலைக்கழக காவலாளி!

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பல்கலைக்கழக காவலாளி ஒருவர் மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மாணவர்கள், இந்த செயற்பாடு எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும் என கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக நேற்றைய தினம் பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் குறித்த தடைகளை மீறி மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jvpnews.com/article/university-guard-kicks-students-in-flames-1621344168


Geen opmerkingen:

Een reactie posten