முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஸ்ரீலங்கா இராணுவம் தடுத்து நிறுத்தியதுடன் நினைவுச் சுடரினை காலால் தட்டியுமுள்ளனர்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது படையினர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து சிவாஜிலிங்கம் கடுமையாக வாதிட்டமையால் அந்தப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten