முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகிய இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தமிழர்களை கொன்று குவித்த இராணுவ வீரர்களுக்கும் மரியாதைக்குரிய பொருளில் விளித்துப் பேசியுள்ளார்.
தமிழர் தாயகமெங்கும் மிகுந்த பொலிஸ் மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, தமிழர் தரப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளும் இன்றைய நாளில் அவர் அவ்வாறு பேசியுள்ளமை பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.
இதுவேளை இன்று நாடாளுமன்றத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உரைக்கு பதிலளித்த எம். ஏ. சுமந்திரன், போரின் முடிவை நினைவுகூரும் போது பெருமளவில் உயிர் நீத்த உறவுகளையும் நினைவு கூறுதலின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten