தமிழீழ மக்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க EPRLF தீட்டிய சதித்திட்டத்தினை நிரூபிக்கும் கடிதம்.
14.12.1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை நிகழ்காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் திடீர்த் தாக்குதல் மூலம் அழித்து ஒழிக்கத் திட்டம் தீட்டி, அத்திட்டம் வெளிப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் ,EPRLF தலைவர் பத்மநாபா தாம் TELOவினருக்குத் தஞ்சம் அளித்தால் தான் விடுதலைப்புலிகள் தம்மீது தாக்குதல் நடாத்தியிருப்பதாக, உண்மையை மறைத்து அறிக்கை விடுத்துள்ளார்.
EPRLF தலைமையகத்திலிருந்து ( இந்தியாவிலிருந்து ) அமீன் என்பவரால் EPRLF இராணுவப்பிரிவின் இரண்டாவது பொறுப்பாளர் ( முதலாவது பொறுப்பாளர் டக்ளஸ் சூளைமேடு சம்பவத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் இருக்கிறார்) சுரேஸ் என்பவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் விடுதலைப்புலிகளை, EPRLF தாக்கி அழிக்கத் தயாரித்த திட்டம் வெளிப்பட்டுள்ளது. சுரேஸ் தற்போது விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் முழுவிபரம்
பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய முயற்சிகளைச் செய்யவும் . ஏற்படும் பிரச்சனைகளை அண்ணருக்கு ( முகுந்தனுக்கு) அறியத்தரவும் . முக்கியமாக LTTE பற்றிய RECEIVED REPLY அனுப்பவும்.
2. இருக்கும் ஆயுதங்களை இயக்கத் தேவையான அளவு தோழர்களின் மும்மடங்கை எடுத்து , அவற்றைத் தலைமை தாங்கக்கூடிய தோழர்களின் கட்டுப்பாட்டினுள் வைத்து , தாக்குதல் போன்றவற்றிற்கான பொதுவான comanding escort முறைகளையும் ,சமிக்கைகளையும் செய்யச் சொல்லவும். இக்குழுக்களை மாற்றமின்றி தாக்குதலின்போதோ , பாதுகாப்பு நடவடிக்கைகளின் போதோ உபயோகித்தல் முக்கியமானது. இனக்குழுக்களின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதி இயக்க நிலையிலும் , ஒரு பகுதி இயக்கத் தயாரான நிலையிலும் மூன்றாவது பகுதி சில மணிநேரத்தில் இயக்கத் தயாராகவுள்ள நிலைக்கு வரக்கூடிய நிலையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் தமது கடமைகளை கடுமையாகச் செய்யலாம்.
3. அவ்வப்பிரதேசங்களில் உள்ள LTTE இயக்கத்தின் தளத்தையும் அவர்கள் தாக்கக்கூடிய சாத்தியக் கூறுகளையும் ,ஆராய்ந்து இதற்கான பதில் நடவடிக்கைகளை நாம் எவ்வாறு செய்தல் வேண்டும் என்பதனை விசாரித்தல் வேண்டும். அல்லது செறிவான மோட்டார் தாக்குதல் அல்லது முக்கிய நபர்களை கொல்லுதல் என்பவற்றின் மூலம் இலகுவாக நிறைவேற்றலாம் என்பதனைக் திட்டமிடுக. ஆனால் இக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் நேரத்துடனும் விரைவாகவும் வினைத்திறனுடனும் எப்படியாயினும் செய்து முடிக்கக் கூடியவர்களாகத் தெரிவு செய்க.
4. தேவையாயின் இக்குழுக்களை ஒன்றுசேர்த்து LTTEன் ஏதாவது முக்கியமான இலக்கின் மீது ஒரு அதிரடித் தாக்குதல் மின்னல் வேகத்தில் முழுப்பலத்துடன் நடத்தக்கூடியவாறு ஒழுங்கு செய்யவும்.
5. பிரதானமாக LTTE ன் முகாம்களைத் தாக்கி , அவைகளனைத்தையும் தவிடுபொடியாக முற்றாகச் சிதைத்துவிடுமாறும் தயார்நிலையிலிருக்கவும்.
6. முக்கிய இடங்களில் , தொடர்ச்சியான இடங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களில் மறைவான இடங்களிலுள்ள O.P (அவதானிப்பு நிலையம் ) யாக மாற்றி LTTEன் தாக்குதல்களை ( ஏற்படும் பட்சத்தில் ) முன்னறியப்படுத்தவும். LTTE இனர் நடமாடுமிடங்களில் அவர்களது ஒவ்வொரு செயல்களையும் அவதானித்து தூதுவர் மூலமாகவும் அறிய ஏற்பாடு செய்யவும்.
7. காவல் அரண் அல்லது அவதானிப்பு நிலையத்தில் ஒருவராக நிற்பவரிடம் முக்கியமான ஆயுதங்களை கொடுக்காது கைக்குண்டு இரண்டு மட்டும் பாதுகாப்பிற்காகக் கொடுக்க ஏற்பாடு செய்யவும்.
8. தோழர்களில் திறமையிருப்பினும் கட்டுப்பாடாகச் செயற்பட முடியாதவர்களைத் தெரிவு செய்யவேண்டாம்.
உ) ரவுண்ட் ரவைகளைப் பாவிக்காமல் MINES ஐ ( நிலக்கண்ணிகளை) பௌதீக முறையில் பாவித்தல்.
(1) இந்த முறையை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்க . குறிப்பாக எதிரி புறப்படும் இடங்களிலேயே ( முகாமைவிட்டு வெளியேறும் போது) கட்டமாக அழித்து விடுவதற்கு பயன்படுத்தல். நிலக்கண்ணியையும் மோட்டாரையும் அதிகமாக உபயோகிக்கவும்.
(2) குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிலையான இலக்குகளைத் தாக்கவே மோட்டாரைப் பயன்படுத்தப் பழகியிருத்தல். முன்னேறி வரும் ஒரு கட்டத்தை அழிக்கும் முறையில் மோட்டாரைப் பயன்படுத்திச் சொல்லிக் கொடுக்கவும்.
ஊ) ஆயுதம் இல்லாத தோழர்களுக்கும் பிரதானமான வேலைகளைக் கொடுக்கவும். பிரச்சாரம் கண்காணிப்பு , தொடர்பு மற்றும் அங்குள்ள தேவைகளுக்கும் இவர்களை ஆயுதமேந்திய தோழர்கட்கு பிரதியீடாய் மாற்றுவதற்கு தயார் நிலையிலும் வைத்திருக்கவும் .
எ) LTTEன் தகவல் தொடர்பு சாதனங்கள் ( communications) பற்றியும் அவை எங்கெங்கு உள்ளது என்பது பற்றியும் அறியத்தரவும் .அவற்றை முற்றாக அழித்து விடுவதற்குரிய தயார்நிலையிலும் வைத்திருக்கவும்.
1) LTTE உடன் நாம் சமாதானத்தைப் பேணவே விரும்புகிறோம் என்பதனை மக்களுக்கு உணர்த்த வேண்டிய உடனடி நடவடிக்கைகளாகும்.
Geen opmerkingen:
Een reactie posten