தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 september 2018

புலிகள், தமிழ் ஆண்களை கொடூரமாக பாலியல் சித்திரவதை செய்த பெண் அதிகாரிகள்! ஐ.நாவில் அதிர்ச்சி அறிக்கை


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களுக்கு மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மிகவும் பயங்கரமான தகவல்கள் அடங்கிய இந்த அறிக்கையை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்த 2009 ஆண்டில் இருந்து தற்போதுவரை தடுப்புக் காவலில் வைத்து ஆண்களுக்கு பாலியல் சித்தரவதை செய்கின்றனர் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது.
”மௌனம் கலைந்தது” இலங்கை போரில் தப்பித்து வந்த ஆண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுகின்றனர் என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஹெலீன் டூகே தயாரித்துள்ளார்.
இந்த அறிக்கையில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 121 ஆண்களின் குமுறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கலாநிதி ஹெலீன் டூகே கருத்து தெரிவிக்கையில்,
“அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வாறான தகவல்களை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. உலக நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தொடரும் கொடூரங்கள் மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது.
பொஸ்னியா குறித்தும் நான் ஆய்வு செய்திருக்கின்றேன். ஆனால் இலங்கையில் தடுப்புக் காவலில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு, பல தடவைகள் பாலியல் வன்கொடுமை சித்திரவதைகள் குறித்த தகவல்களை கேள்விப்படும் போது மிகவும் மோசமான கொடூரத்தை உணர்கின்றேன்.
பலர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நான் இதற்கு முன்னர் கண்டிருக்கவோ, கேள்விப் பட்டிருக்கவோ இல்லை. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலான கொடூரங்களாக இவை இருக்கின்றன.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சில வெளிவந்துள்ளன. அதில்,
தன்னை விசாரித்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ சீருடை அணிந்திருந்த அந்தப் பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தினார் என்றும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப் பெண் என்றும் கொடூரத்துக்கு முகம் கொடுத்த ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, அவர் உட்பட பல தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண் படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.
“பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மை ஆடைகள் இன்றி அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்” என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/statements/01/193972?ref=rightsidebar

Geen opmerkingen:

Een reactie posten