கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் பொபினி லாபிறிவுவார் (l'Abreuvoir) பகுதியில் 31 வயதான மேற்படி இளைஞர் உந்துருளி ஒன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
தமிழர்கள் உட்பட மக்கள் கூடியிருந்த வணிக அங்காடி மையப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் மேற்படி ஆயுததாரி தனது உந்துருளியிலேயே தப்பிச்சென்றிருந்தார். இ ந்தநிலையில் இந்த சம்பவத்தையடுத்து அங்கு அதிவேகமாக விரைந்து சென்ற காவற்துறை வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளாகி தலைகீழாக புரண்டது.

இ தில் காவற்துறையை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர் குறித்த விபரங்கள் இன்னமும்காவற்துறையால் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இ ந்தச்சம்பவத்தால் பொபினி பகுதியில் வசிக்கும் தமிழர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten