தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 augustus 2018

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு! அமுலாகும் புதிய விதிமுறை!

சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான வதிவிட புதுப்பித்தல்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை கடைபிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதனன்று கூடிய 7 பேர் கொண்ட சிறப்பு குழு இந்த புதிய விதிமுறைகளுக்கு இறுதி வடிவம் அளித்துள்ளதாகவும், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு முதல் குறித்த விதிமுறைகள் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செல்லும் வெளிநாட்டு குடிமக்களுக்கான வதிவிட அனுமதியை இரண்டு ஆண்டுகளுக்கு என ஒரேயடியாக நீட்டிக்கவும் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகிறது.
தற்போது சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் வெளிநாட்டு குடிமக்களுக்கு ஓராண்டு மட்டுமே வதிவிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சுவிஸ் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செல்லாத வெளிநாட்டவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அரசியலமைப்பு சட்டங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், பொருளாதார பங்களிப்பு வேண்டும் மற்றும் மொழித்திறமையும் கருத்தில் கொள்ளப்படும்.
நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டவர்கள் ஒருங்கிணைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது அறியவந்தால், நிரந்த வதிவிட அனுமதியை ரத்து செய்யவும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் அனுமதி வழங்கப்படும்.
புதிய விதிமுறைகளை மீறும் அகதிகள் மற்றும் ஆதரவற்றவர்கள் மாகாண அரசிடம் இருந்து பெறப்படும் உதவிகளை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ அனுமதிக்கப்படுகிறது.

http://news.lankasri.com/swiss/03/185814?ref=ls_d_special

Geen opmerkingen:

Een reactie posten