தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 juni 2018

அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்!!


அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.
எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.
தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன்.
ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.
அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.
ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்
இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.
அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.
சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார்.
"சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண்.
சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.
அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.
"அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம்.
மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள்..
அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.
ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.
தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.
இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான்
எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம். இச்செய்தியை பகிரவது கூடஒரு உதவிதான்.

http://www.jvpnews.com/world/04/175108

Geen opmerkingen:

Een reactie posten