தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 juni 2018

ஐரோப்பா செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்து!

இத்தாலி ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சி செய்யும் இலங்கையர்கள் உட்பட ஏனைய நாட்டவர்களுக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் தற்போது தங்கியுள்ள சட்டவிரோத புலம்பெயர்தோர் மற்றும் அனுமதியற்ற முறையில் இத்தாலி செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இத்தாலிய வெளியுறவு அமைச்சர் மத்தேயோ செல்வினி தகவல் வெளியிட்டுள்ளார்.
இத்தாலியில் தற்போது சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை தங்கள் நாடுகளுக்கு அனுப்புவதற்கு பயணப்பைகளை தயார் செய்யுமாறு அமைச்சர் மத்தேயோ அறிவித்துள்ளார்.
மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள சட்டவிரோத படகு மற்றும் புலம்பெயர்ந்தோர்களை விடுவித்து கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற அமைப்புகளுக்கு சொந்தமான கப்பல்கள் இத்தாலி துறைமுகங்களுக்கு நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
3 மாதங்களாக இத்தாலியில் நிலவிய அரசியல் ஸ்திரமன்ற நிலைப்பாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் முதலாம் திகதி பேராசிரியர் குசேப் கொன்தேவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் இத்தாலி வெளியுறவு அமைச்சர் மத்தேயோ செல்வினி சொல்வதை செய்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒரு பிரபலமான விடயமாக கருதப்படுகின்றது.
இலங்கையில் இருந்து சட்டவிரோத இத்தாலி செல்ல முயற்சிப்பவர்களும், அதற்காக பணம் செலுத்த எதிர்பார்ப்பவர்களும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் சிறையில் அடைப்படாமல் இருப்பதற்கும், பணத்தை பாதுகாப்பது தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறும் இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

http://www.tamilwin.com/europe/01/184479?ref=rightsidebar-lankasrinews

Geen opmerkingen:

Een reactie posten